ஒமைக்ரான் வந்தால் என்ன செய்யும்.. எலிகளால் தெரிய வந்த 3 உண்மைகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் அதன் ஆட்டத்தை தொடங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் அது சமூக பரவல் ஆகி விட்டதாக சுகாதாரத்துரை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதற்கு முன் கொரோனா வைரசின் உருமாறிய வைரஸ்களை விடவும் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.

டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரானின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளும் தற்போது வெளிவந்துள்ளது.

எலிகள் மீது நடத்தப்பட ஆய்வு:

எலிகள் மீது நடத்தப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில், ஒமைக்ரான் தொற்று மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, எடை குறைவு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தகவல் உலக மக்களின் மனதை குளிர வைக்கும் விதமாக உள்ளது

அதோடு, எலிகளின் நுரையீரலில் இருந்த ஒமைக்ரான் பாதிப்பு பத்தில் ஒரு மடங்கு குறைவாக இருந்தது என ஆய்வில் கூறப்பட்டிருந்தது. பல ஆய்வுகள் ஒமைக்ரான் வைரசினால் பாதிப்பு குறைவு என்று கூறினாலும் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் உடல்நலக் குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல், ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மனித திசுக்கள் மீதான ஆய்வறிக்கையும் ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பதையே சுட்டிக்க்காட்டுகிறது.

ஆறுதல் அளிக்கும் தகவல்:

12 நுரையீரல் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வில் ஒமைக்ரான் நுரையீரலின் கீழ்ப்பகுதியில் அதிகமாக பாதிக்காததால் அதிக உயிரிழப்புகளை ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் கரணமாக ஒமைக்ரான் தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்படாது என்ற தகவல் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது எனலாம். பாதிப்பு குறைவு என ஆய்வு சொன்னாலும், யாருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என தெரியாது. எனவே முன்னெச்சரிக்கையாக மாஸ்க் போடுவது மிகவும் அவசியம். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட்டவர்களால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடிகிறது. எனவே தடுப்பூசி அனைவரும் போட வேண்டியது அவசியமாகிறது.

CORONAVIRUS, OMICRON, RATS, CORONA, ஒமைக்ரான், எலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்