"சாண்ட்விச்-ல் மயோனைஸ் அதிகமா இருக்கு".. கோபத்தில் வாடிக்கையாளர் செஞ்ச செயல்.. ஊழியருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சாண்ட்விச்சில் அதிக அளவு மயோனைஸ் இருந்ததாக கூறி, உணவக ஊழியரை வாடிக்கையாளர் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சாண்ட்விச்-ல் மயோனைஸ் அதிகமா இருக்கு".. கோபத்தில் வாடிக்கையாளர் செஞ்ச செயல்.. ஊழியருக்கு நேர்ந்த சோகம்..!
Advertising
>
Advertising

Also Read | வெளிநாடுகளுக்கு போக இரட்டை சகோதரிகள் செஞ்ச வேலை.. பல வருஷமா நடந்த தில்லுமுல்லு.. ஏர்போர்ட் அதிகாரிக்கு வந்த திடீர் சந்தேகம்..!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ளது அட்லாண்டா நகரம். இங்குள்ள உணவகத்திற்கு நேற்று 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சென்றிருக்கிறார். சாண்ட்விச் ஆர்டர் செய்த அவர், அதற்காக காத்திருந்துள்ளார். அப்போது, அந்த உணவகத்தில் பணிபுரியும் பிரிட்டானி மெக்கான் சாண்ட்விச்சை கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். இந்நிலையில், சாண்ட்விச்சில் மயோனைஸ் அதிகமாக இருப்பதாக அந்த வாடிக்கையாளர் வாக்குவாத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்த உணவக ஊழியர்கள் முயற்சித்திருக்கின்றனர்.

விபரீதம்

ஆனால், தொடர்ந்து கோபத்தில் கத்திய அந்த வாடிக்கையாளர் 26 வயதான பிரிட்டானி மெக்கானை கொலை செய்திருக்கிறார். இதில், அதே உணவகத்தை சேர்ந்த மற்றொரு ஊழியரான ஜடா ஸ்டாடம் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் அந்த வாடிக்கையாளரை கைது செய்தனர்.

இதனிடையே, காயமடைந்த ஜடா ஸ்டாடமை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உணவகத்தில் ஊழியர்களை தாக்கிய நபரை கைது செய்த அட்லாண்டா நகர போலீஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில், அவருடைய பெயர் மெல்வின் வில்லியம்ஸ் என்பது தெரியவந்திருக்கிறது.

74 பேர்

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்த வன்முறைச் செயலில் தாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சம்பவத்தின் போது உணவகத்தின் உள்ளே இருந்தவர்கள் குறித்து நாங்கள் கவலையடைந்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. அட்லாண்டாவில் கடந்த ஒருவருடத்தில் ஏற்பட்ட பல்வேறு வன்முறைகளினால் 74 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசியுள்ள அட்லாண்டா காவல்துறை அதிகாரி சார்லஸ் ஹாம்ப்டன், “உணவக ஊழியரை கொன்ற நபரை கைது செய்துள்ளோம். உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது" என்றார். இந்த உணவகத்தின் இணை நிறுவனர் வில்லி க்ளென் இதுபற்றி பேசுகையில் "எப்படி ஒரு நபர் துணிச்சலாக மற்றொருவரை கொல்ல முடிகிறது? அதுவும் சாண்ட்விச்சில் மயோனைஸ் அதிகமானதற்கெல்லாம் இப்படி செய்தது இதயத்தை கனக்கச் செய்கிறது” என தெரிவித்துள்ளார்.

சாண்ட்விச்சில் அதிக அளவு மயோனைஸ் இருந்ததாக கூறி, உணவக ஊழியரை வாடிக்கையாளர் கொலை செய்த சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.

Also Read | வெள்ளம் வந்தாலும் இனி கவலையில்ல.. 15 அடி உயரத்திலும் மிதக்கும் வீடுகளை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்..!

SANDWICH, RESTAURANT, RESTAURANT WORKER, MAYONNAISE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்