'சீனாவில் ஆரம்பித்த அடுத்த ஆட்டம்'... 'இந்த நோய் எந்த நேரத்திலும் மனிதர்களை தாக்கலாம்'... உண்மையை போட்டுடைத்த ஆய்வாளர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா அச்சுறுத்தலிலிருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதிய காய்ச்சல் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
2019 டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதுவரை 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்கள். உலக நாடுகள் பலவும் கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பாதிப்பு இன்னும் அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் போன்று பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ள காய்ச்சல் ஒன்று சீனாவில் பன்றிகளிடையே தற்போது பரவி வருகிறது. ஆனால் இந்த நோய் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள். இது தற்போது மனிதர்களிடையே பரவவில்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு. இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே இதில் அச்சம் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இது புதுவிதமான நோய் என்பதால் மனிதர்களுக்கு இதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தி என்பது இருக்காது. இதனால் தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், இதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த வைரஸானது ஜி4 இஏ எச்1என்1 என ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகம் முழுவதும் மீண்டும் 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட்டது... இந்த 'மாவட்டங்களுக்கு' மட்டும் 4 நாட்கள் அதிகம்... விவரம் உள்ளே!
- 'கொரோனா வைரஸுக்கு மருந்து ரெடி!'.. அதிரடியாக அறிவித்த சீனா!.. அடுத்த ஒராண்டுக்கு திட்டம் இது தான்!
- மொத்த தமிழகத்திலும்... 'இந்த' மாவட்டத்துல மட்டும் தான்... கொரோனா ரொம்ப 'ரொம்ப' கம்மி!
- மதுரையில் 290 பேருக்கு ஒரே நாளில் தொற்று!.. கோவையில் 528 ஆக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- "23 வயது இளைஞர் உட்பட 62 பேர் பலி!".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி! சென்னையில் 55,000-ஐ கடந்த பாதிப்பு!
- தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி!
- 'காட்டுத்தீ'யாக பரவிய தகவல்... 'வெளிநாடு'களில் இருந்து வந்தவர்களால்... 'திருச்சி' மக்கள் அச்சம்!
- Viral VIDEO: 'மேல கை வைக்கிற வேலயெல்லாம் வச்சுக்காதீங்க!' - போலீஸை அதட்டிய இளைஞர்.. அடுத்து நடந்தது என்ன? ’சென்னையில் பரபரப்பு சம்பவம்!!
- ‘இதெல்லாம் இருந்தா கூட கொரோனாவா இருக்கலாம்’.. புதிதாக 3 அறிகுறிகளை சேர்த்த அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம்..!
- "லாக்டவுனை நீட்டிக்கலாமா? வேணாமா? எப்படி இருக்கு கொரோனா? ".. தமிழக முதல்வரிடம் மருத்துவக் குழு பரிந்துரைத்தது இதுதான்!