உலகத்தின் மிகப்பெரிய செடி.. அதுவும் கடலுக்குள்ள.. அடேங்கப்பா இவ்வளவு கிலோமீட்டருக்கா வளந்திருக்கு.!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய தாவரம் ஆஸ்திரேலிய கடலில் வளர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் Shark Bay பகுதியில் இருக்கும் கடலில் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள், கடலுக்கு அடியே பிரம்மாண்ட செடி வளர்ந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது உலகின் மிகப்பெரிய பரப்பளவில் வளர்ந்துள்ள தாவரம் எனக் குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், இது 200 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது கிளாஸ்க்கோ நகரத்தை விட பெரியது என்றும், மான்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
விபத்து
மரபணு சோதனையின் போது எதிர்பாராத விதமாக இந்த தாவரத்தை கண்டறிந்ததாக கூறும் ஆய்வாளர்கள்,"முதலில் இது கடல் புல்வெளி என நினைத்தோம். ஆனால், ஒரே விதையில் இருந்து முளைத்த செடி என்பது பின்னர் தான் தெரியவந்தது. இது 4,600 ஆண்டுகள் பழமையான தாவரமாகும். இது 180 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தச் செடி வளர்ந்திருக்கிறது" என்றனர்.
ஆய்வின்படி, இந்த தாவரமானது "பாசிடோனியா ஆஸ்ட்ராலிஸ்" கடற்பாசியின் ஒற்றை குளோன் எனத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இது உலகின் மிகப்பெரிய கடற்பாசிகளுக்கு முதன்மையான எடுத்துக்காட்டு இது எனவும் கூறியுள்ளனர்.
ஆச்சர்யம்
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியலாளரும் ஆய்வு இணை ஆசிரியருமான எலிசபெத் சின்க்ளேர் இதுபற்றி பேசுகையில், "நாங்கள் தரவுகளை பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டோம். இவை அனைத்தும் ஒரே தாவரத்திற்கு சொந்தமானது என்பது திகைப்பை ஏற்படுத்தியது" என்றார்.
இந்த வகை தாவரம் அதிகளவில் பூக்கவோ விதைகளை தோற்றுவிக்கவோ செய்வதில்லை என கண்டறிந்துள்ள உயிரியலாளர்கள்," பல ஆயிரம் ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு இது வளர்ந்திருப்பது மேலும் ஆச்சரியமளிக்கிறது" என்றனர். ஆஸ்திரேலிய கடலில் சுமார் 200 கிலோமீட்டர் சதுர அளவிற்கு ஒரே தாவரம் வளர்ந்திருப்பது உயிரியலாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீட்டின் மேல்கூரையை பிச்சுக்கிட்டு உள்ள விழுந்த மர்ம உலோகம்.. ஒருவேளை அதுவா இருக்குமோ? ஆய்வாளர்கள் சொல்லிய ஆரூடம்..!
- மனிதர்களை போலவே வாய்.. Beach ல கரை ஒதுங்கிய வித்தியாசமான உயிரினம்.. வைரல் புகைப்படம்..!
- சுட்டெரிக்கும் சூரியன்.. பிளக்கும் வெயில்.. 72 வருஷத்துல இப்படி இல்ல.. அதிர்ச்சி ரிப்போர்ட்.. எங்க?
- ஷேன் வார்ன் சாகுறதுக்கு 8 மணி நேரம் முன்ன கில்கிறிஸ்டுக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்! நெகிழ்ச்சியான சம்பவம்
- "இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை... இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துருக்கனும்" - மிகவும் வருத்தப்பட்ட மேக்ஸ்வெல்! என்ன காரணம்?
- 2022 IPL: திருமண பிசியில் பிரபல வீரர்.. ஆர்சிபிக்கு எப்போதான் விளையாட வருவாரு.. கேப்டன் பொறுப்பு யாருக்கு?
- T20 World Cup: இந்தியா- பாகிஸ்தான் போட்டி.. வேற லெவலில் சாதனை செய்த ரசிகர்கள்!
- "பழைய பன்னீர்செல்வமா திரும்பி வருவேன்'.. கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
- ஆஸ்திரேலியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்! யார் இந்த நிவேதன் ராதாகிருஷ்ணன்?
- ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பாக், வீரர்.. சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை.. ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!