'கொரானா' வைரஸ், தானே 'பலவீனமடைந்து வருகிறதா...?' இத்தாலி, ஸ்பெயினில் குறைந்ததற்கு காரணம் என்ன?... 'ஆதாரங்களை' அடுக்கும் 'ஆராய்ச்சியாளர்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தன்னை பலவீனப்படுத்திக்கொண்டு வருகிறதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வருகின்றனர்.

Advertising
Advertising

கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் மும்முரமாக நடந்து  வருகிறது. விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்பே  வைரஸே, தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா? என்பது குறித்த ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வருகின்றனர்.

இத்தாலியின் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜங்கரிலோ கூறும் போது, கொரோனா வைரஸ் ஸ்வாப் பரிசோதனையின் கடைசி 10 நாட்களில் கண்டறியப்பட்ட வைரஸானது, கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது கணிசமாகக் குறைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கும் என்பது வெறும் அனுமானங்களே என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மறுபுறம், இந்த கூற்றுக்கு விஞ்ஞான அடிப்படையோ அல்லது மரபணு உரிமைகோரலின் அடிப்படையோ இல்லை என்று ஸ்காட்லாந்தின் எம்.ஆர்.சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஸ்கார் மெக்லீன் தெரிவித்துள்ளார்.

ஸ்வாப் பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே வைரஸ் பலவீனமடைந்துள்ளது என்று முடிவு செய்வது தவறானது, இதை கூறுவதற்கு முன்பு ஒரு ஆழமான ஆய்வு அவசியமானது என்று அவர் கூறுகிறார். 

ஜாங்கெரில்லோவின் கூற்றை நிராகரித்துள்ள உல சுகாதார அமைப்பு, வைரஸ் திடீரென பலவீனமடைந்து விட்டதாக நம்பிக்கை பரவக்கூடாது என்றும் கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின்  தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் மற்றும் வைரஸ்கள் மற்றும் தொற்று நோய்கள் குறித்த பல வல்லுநர்கள், ஜாங்க்ரிலோவின் கருத்துக்கள் அறிவியல் சான்றுகளால் ஆதரிக்கப்படவில்லை என கூறி உள்ளனர்.

இந்த விவாதங்களுக்கு மத்தியில், தாம் கூறுவது சரிதான் என்பதில் சான் ரஃபேல் மருத்துவமனை உறுதியாக உள்ளது. மேலும் 200 நோயாளிகளின் அறிகுறிகளை ஆராய்ந்த பின்னர் வைரஸ் மிகவும் பலவீனமாகிவிட்டது என்று கூறலாம் என மருத்துவமனையின் நுண்ணுயிரியல் மற்றும் வைராலஜி ஆய்வகத்தின் இயக்குனர் மாசிமோ கிளெமென்டி கூறுகிறார். 

ஜெனீவாவில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் மேனியோ பாசெட்டி சான் ரஃபேல், மருத்துவமனையின் கூற்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது வைரஸின் சக்தி பலவீனமடைந்திருப்பதாகவும், தற்போதுள்ள கொரோனா வைரஸ் முன்பு இருந்ததை விட வித்தியாசமாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.   சில வைரஸ்கள் நீண்ட காலமாக உயிர் வாழும்போது தானாகவே பலவீனமடைந்துவிடுகின்றன என்றும் அவர் கூறி உள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்