கொரோனாவுக்கு 'பட்டப்பெயர்' வைக்கும் 'ட்ரம்ப்...' '19 பெயர்கள்' வைத்திருக்கிறாராம்... 'சீனாவை' வித்தியாசமாக கலாய்த்த 'ட்ரம்ப்...'
முகப்பு > செய்திகள் > உலகம்தேர்தல் பிரச்சாரத்தின் போது, கொரோனாவை குங் ஃபுளூ என அதிபர் ட்ரம்ப் அழைத்ததால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு இதுபோன்று 19 பெயர் வைத்திருப்பதாகவும் அவர் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்பும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒக்லஹாமா மாகாணத்தில் துல்சா நகரில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்று பேசினார்.
அப்போது, சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வந்தது என்பதற்காக, அவர் சீனாவின் தற்காப்பு கலையான குங்புவை நினைவுபடுத்தும் வகையில், கொரோனா வைரசை ‘குங்புளூ' என்ற பெயரால் அழைத்தார். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் சீனாதான் என மறைமுகமாக அவர் குற்றம் சுமத்தினார்.
தொடர்ந்து அவர் பேசிய அவர், "கொரோனா வைரஸ் தொற்று ஒரு நோய்தான். இதை இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் பல்வேறு பெயர்களால் அழைக்க முடியும். நான் குங் புளூ என்று அழைப்பேன். அதன் 19 வெவ்வேறு பதிப்புகளையும், வெவ்வேறு பெயரிட்டு அழைப்பேன்." எனக் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று, சீனாவின் உகான் நகரில் தோன்றியது என்பதால் டிரம்ப் நிர்வாகம் உகான் வைரஸ் என்றும் கொரோனா வைரசை அழைக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா மீது தொடர்ந்து டிரம்ப் குற்றம்சுமத்தி வருகிறார். ஆரம்பத்தில் இந்த நோய் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடாமல் சீனா மறைத்து விட்டதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்றால் டிரம்பின் செல்வாக்கு அமெரிக்காவில் குறைந்து வருகிறது. அது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. எனவேதான் டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக கொரோனாவுக்கு தடுப்பூசியை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்னும் கொஞ்ச நாளுல தெரியும்... 'டிரம்ப்' எடுக்கும் அடுத்த 'மூவ்'... 3 லட்சம் இந்திய 'ஐ.டி' ஊழியர்கள் நெலம 'கஷ்டம்' தான்?!
- "10 வருஷ வித்தியாசத்துல இன்னொரு இரட்டைக் குழந்தை!"... "ஆனா அதே கருமுட்டை!".. உறையவைக்கும் நிகழ்வு!
- "சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று இருந்திருக்கா?".. ஷாக் தரும் ரிப்போர்ட்!
- இனி 'பொறுத்துக்' கொண்டிருக்க 'முடியாது...' 'தேவைப்பட்டால்' செயலில் 'இறங்குவோம்...' 'சீனாவை' வெளுத்துவாங்கிய 'மைக் பாம்பியோ...'
- 'ஒன்றரை வருஷம்' எல்லாம் 'காத்திருக்க முடியாது...' 'அதிபர் தேர்தல்' சீக்கிரம் வரப் போகுது... 'உடனடியா' மருந்தை 'கண்டுபிடிங்க...' 'விரட்டும் ட்ரம்ப்...'
- வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு நடிகர் கருணாஸ் ரூ.1 லட்சம் நிதி உதவி!.. குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் ஏற்றார்!
- 'வைரஸ் பரவலைத் தொடர்ந்து...' 'சீனாவிலிருந்து' கிளம்பும் 'அடுத்த பூதம்...' 'ஆஸ்திரேலியாவைத்' தொடர்ந்து 'இந்தியாவுக்கு' வரவிருக்கும் 'ஆபத்து...'
- 'சீனர்களின்' ரகசியம் சொல்லும் 'முன்னாள் அதிகாரி...' 'உபசரிக்கும்' போதே முதுகில் 'குத்துபவர்கள்...' அவர்களிடம் 'யுத்த நெறி' பயன்படாது...
- 'என் லவ்வ புரிஞ்சுக்காம அவாய்ட் பண்ணிட்டான்...' '30,000 அடி உயரத்தில விமானம் பறந்துக்கிட்டு இருக்குறப்போ...' காதலி செய்த அதிர்ச்சி காரியம்...!
- 'இந்தியா... தைவான்... ஹாங்காங்!'.. ட்ரெண்டிங்கான 'மில்க் டீ' கூட்டணி!.. ஏக கடுப்பில் சீனா!.. இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு!