'இத்தனை வருஷமா இது தெரியாம அது கூடவே இருந்திருக்கேன்'... 'ஷாக்கில் இருந்து மீளாத வீட்டு ஓனர்'... வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வீட்டைப் புதுப்பிக்கும்போது வீட்டின் உரிமையாளருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் நிச்சயம் அதிர்ச்சியும், சந்தோஷமும் இருக்கத்தான் செய்யும்.

பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் Francois Mion. இவர் தனது வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டே இருந்துள்ளார். ஆனால் அதற்கான சரியான நேரம் வராமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு வழியாக வீட்டைப் புதுப்பிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை Francois தொடங்கியுள்ளார்.

அப்போது வீட்டில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், கட்டுமானத்திற்கு நடுவே ஒரு உலோக பெட்டி இருந்ததைப் பார்த்த பணியாளர் Francoisவிடம் சென்று கூறியுள்ளார். உடனே அவர் அந்த பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார். பார்த்த அடுத்த நிமிடம் அவருக்கு கையும் காலும் ஓடவில்லை. அந்த பெட்டிக்குள் தங்க நாணயங்கள் இருந்துள்ளது.

இன்னும் சில நாட்களுக்குப் பின்பு, மேலும் ஒரு இடத்தில் ஒரு பைக்குள் இன்னும் சில தங்க நாணயங்கள் கிடைக்க, அவர்களிடம் தற்போது 239 தங்க நாணயங்கள் உள்ளன. அவை தற்போது ஏலம் விடப்பட உள்ளன. அவை 250,000 யூரோக்கள் முதல் 300,000 யூரோக்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 2.60 கோடிக்கு மேல் இருக்கும்.

இதற்கிடையே ஏலத்தில் கிடைக்கும் தொகையை வீட்டின் உரிமையாளர்களும், பணியாட்களும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள். பிரான்ஸ் சட்டப்படி, இதுபோல் கிடைக்கும் புதையல் எல்லாம் அரசுக்குச் சொந்தமாகும். ஆனால், 2016க்குப் பிறகு வாங்கப்பட்ட நிலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புதையல்களுக்குத்தான் இந்த சட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்