'உயிர் நீத்தவர்களை அடக்கம் பண்ண முடியாமல்... 5 வாரங்கள் வீட்டிலேயே வைத்திருக்கும் அவலம்!' - கொரோனாவின் ‘பேயாட்டம்’.. கதிகலங்கி நிற்கும் நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் இறந்து போன உறவினர்களை அடக்கம் செய்ய 5 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் மக்கள் கூறி அவதியுறுகின்றனர்.

'உயிர் நீத்தவர்களை அடக்கம் பண்ண முடியாமல்... 5 வாரங்கள் வீட்டிலேயே வைத்திருக்கும் அவலம்!' - கொரோனாவின் ‘பேயாட்டம்’.. கதிகலங்கி நிற்கும் நாடு!

கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இறந்தவர்களை அடக்கம் பண்ணும் அளவுக்கு தயாராக முடியவில்லை என்றும் கூறி பிரிட்டன் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இறுதி சடங்கு மையம் நடத்தி வருபவர்களும் உடல்களை வைக்க இடமில்லாமல் போகும் நிலை ஏற்பட்டதாக கூறிவருகின்றனர்.

relatives waiting for 5 weeks funeral directors reveals

பிரிட்டனின் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிற சில இடங்களில் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்வதற்கு மக்கள் 5 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக அவலமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலை பதப்படுத்தும் வேலையை செய்பவர்கள் கொரோனாவால் இருந்தவர்களின் உடல்களை கையாள வேண்டிய சூழ்நிலையால், தங்களுக்கும் நோய்தொற்று ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்துடன் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ALSO READ: 'காது வலியின் உச்சத்தில் வந்த 3 வயது சிறுவன்!' - காதுக்குள் இருந்ததை பார்த்து ‘ஆடிப் போன மருத்துவர்கள்!’

கடந்த ஆண்டில் மட்டும்  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 90,000 இறுதிச் சடங்குகளை நடத்தியதாக மிரர் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது இறுதிச் சடங்கை நடத்துபவர்கள் அதிக அழுத்தத்துக்கு ஆளானதாகவும் கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்