‘வெற்றி பெற்ற 8 பேரில் 6 இந்திய வம்சாவளியினர்..’ பிரமித்துப் போன நடுவர்கள்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி நடைபெறுவது வழக்கம்.

உலக நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த 94வது ஸ்பெல்லிங் பீ போட்டியில் கிட்டத்தட்ட 562 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ரிஷிக் காந்தஸ்ரீ, சாகேத் சுந்தர், ஷ்ருதிகா பதி, சோஹம் சுகாதங்கர், அபிஜய் கொடாலி, ரோஹன் ராஜா, கிறிஸ்டோபர் செர்ராவோ, எரின் ஹோவர்டு ஆகிய 8 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தேர்வானார்கள்.

12 முதல் 18 வரை வயதுடைய இவர்கள் அனைவருமே 47 வார்த்தைகளைப் பிழையின்றி உச்சரித்து, அதற்கான ஸ்பெல்லிங்கையும் சரியாகச் சொல்லி நடுவர்களைப் பிரமிக்க வைத்துள்ளனர். ஒரு வார்த்தையைக் கூட தவறாக உச்சரிக்காததால் 8 பேரும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் சாம்பியன் பட்டமும், 50 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 8 பேர் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். வெற்றி பெற்றவர்களில் 6 பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SPELLINGBEE2019, USA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்