'கொரோனா தடுப்பூசி போட்டதும்'... 'நேரலையில் மயங்கி விழுந்த செவிலியர்!'.. உண்மையில் நடந்தது என்ன? நிபுணர்களின் மருத்துவ விளக்கம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க செவிலியர்களிலேயே கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்,  முதல் செவிலியர் டிஃபானி பாண்டிஸ் டோவர்.

30 வயது நிரம்பிய தலைமை செவிலியரான இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டதும், இதன் அவசியத்தை தொலைக்காட்சி ஊடகங்கள் முன்னிலையில் விளக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது மயங்கிச் சரிந்துவிட்ட நிகழ்வு நேரலையில் உலகமெங்கும் செய்தி ஊடகங்களில் வைரலானது. இதனை அடுத்து அமெரிக்க தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பனதல்ல, மக்களை சோதனை எலிகளாக்காதீர்கள். இதை தடை செய்யுங்கள் என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் உண்மையில் இந்த தடுப்பூசி போட்டால், போடப்படுபவரால் அந்த வலியைத் தாங்க முடியாமல், மயக்கம் போட்டு விழுவார், சில நிமிடங்களில் அது தானாகவே சரியாகிவிடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி பேசிய அந்த செவிலியர்,  கொரோனா தடுப்பூசி போட்ட வலி உணர்வைத் தாங்க முடியாமல், மயக்கம் வருவதுண்டு ஆனால், தடுப்பூசியின் தன்மைக்கும் மயக்கம் வந்ததற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி வல்லுநர்கள் பேசும்போது, “நம் உடலில் இதயத்தையும் ரத்த நாளங்களையும் இணைக்கக் கூடிய வேகஸ் நரம்பு (Vagusnerve) இதயத் துடிப்பு மற்றும், ரத்த நாள மென்தசைகளின் இயக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துகிறது. இதன் செயல்பாடு சீராக இருந்தால் தான், மூளைக்கு போகும் ரத்தம் சரியாகச் செல்லும். செவிலியர் டிஃபானிக்கு ஏற்பட்ட இந்த வலிஉணர்வு வேகஸ் நரம்பைத் தாக்கினால் அசிடைல் கோலின் எனும் வேதிக் கடத்தி சுரந்து, ரத்த நாளங்கள் விரிந்து, ரத்த அழுத்தம் கீழ்நோக்கி இறங்கும், இதயத்துடிப்பும் குறைந்துவிடும், அந்த சமயத்தில் மயக்கம் வருவது, உடல் வியர்ப்பதெல்லாம் சில நிமிடங்களுக்கு நடக்கும், சில நிமிடங்களில் ரத்த ஓட்டம் சீராகி, இதயத் துடிப்பு பழைய நிலைமைக்குத் திரும்பும்போது, மயக்கம் தெளிந்துவிடும்.” என்று கூறுகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்