கனவிலும் நினைக்காத... தாறுமாறான 'போனஸ்'... அசத்திய நிறுவனம்... திக்கு முக்காடிப் போன 'ஊழியர்கள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, ஊழியர் ஒருவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய் அளவுக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகை போனஸ் அளித்து தனது ஊழியர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

மேரிலேண்ட் மாகாணத்தில், பால்ட்டிமோர் எனும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, செயின்ட் ஜான் புராப்பர்ட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், 198 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஊழியர்களுக்கு விருந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வெறும் விருந்து தானே என்று நினைத்து ஹோட்டலுக்கு போயிருந்த ஊழியர்களுக்கு, அங்கு காத்திருந்தது மிகப் பெரிய அதிர்ச்சி. விருந்துக்கு வந்திருந்த ஊழியர்கள் அனைவருக்கும் சிவப்பு நிற கவர் கொடுக்கப்பட்டது.

இதனை திறந்து பார்க்க சொன்னபோது, உண்மையில் ஊழியர்கள் திகைப்பில் ஆழ்ந்து திக்குமுக்காடி போயினர். ஏனெனில் யாரும் நினைக்காத அளவிற்கு இந்திய மதிப்பில் சுமார் 70 கோடியே 60 லட்சம்  ரூபாய் போனஸ் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 198 ஊழியர்களுக்கும், அவர்களது அனுபவத்தை பொறுத்து பெரும்பாலானோருக்கு 35 லட்சம் ரூபாய் முதல், சிலருக்கு 2 கோடி ரூபாய் வரையில் போனஸ் வழங்கப்பட்டது. திங்கள்கிழமை சேர்ந்து 6 நாளே ஆன ஊழியர் ஒருவருக்கு சுமார் 7 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்பட்டதே குறைந்த போனஸ் ஆகும்.

சமீபத்தில் சுமார் 20 மில்லியன் சதுர அடி அலுவலகம், சில்லறை விற்பனை மற்றும் கிடங்கு இடம் உள்ளிட்டவற்றை 8 மாநிலங்களில் அபிவிருத்தி செய்வதற்கான இலக்கை அடைந்ததன் அடையாளமாகவே இந்த போனஸ் வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவரான எட்வர்ட் செயின்ட் ஜான் (81) கூறுகையில், ‘ஊழியர்கள் இல்லாமல், நான் இல்லை, படகில் சவாரி செய்வது நான் என்றாலும், அதனை ஓட்டுவது அவர்கள்தான்.

ஒவ்வொரு ஊழியர்களின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிக்கும் நான் நன்றி சொல்லி கொள்கிறேன். இதைவிட வேறு சிறந்த வகையில் அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு தெரியவில்லை’ என்றார். தங்கள் வாழ்க்கையில் மாயாஜாலம் நிகழ்ந்ததாகவே ஊழியர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

US, BONUS, MONEY, CHRISTMAS, EMPLOYEES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்