"பாய்ஸ்.. நல்ல ஆக்‌ஷன் பிளாக் மாட்டியிருக்கு.. ரெடியா இருங்க வெச்சு செய்வோம்!".. கிம் ஜாங் உன்னின் சகோதரி எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி, கிம் யோ ஜாங் தென் கொரிய அதிகாரிகளுடனான உறவை முறித்துக் கொள்ள இது "சரியான நேரம்" என்று கூறியதுடன், "எதிரி நாடான" தென்கொரியாவுக்கு எதிரான அடுத்த நடவடிக்கையை இராணுவத்திலிருந்து எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவின் நடத்தையை கண்டித்து அறிக்கைகளை வெளியிடுவதை விட தொடர்ச்சியான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்வதே நல்லது,  என்று கூறிய கிம் யோ ஜாங் இது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம் என்றும்  கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் வாயிலாகத் தெரிவித்தார்.

"இனி குப்பைகளை டஸ்ட்பினில் எறிய வேண்டும்," என்று சூசகமாகச் சொன்ன கிம் யோ ஜாங்,  "எங்கள் கட்சி மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அடுத்த நடவடிக்கையை தீர்க்கமாகச் செய்ய எதிரி நாட்டுடனான விவகாரங்களுக்கு, முடிவுகட்ட பொறுப்பான போர் வீரர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 13, 2000 அன்று தொடங்கிய உச்சிமாநாட்டில், அப்போதைய ஜனாதிபதி கிம் டே-ஜங்கின் நல்லிணக்க முயற்சி, வர்த்தக மற்றும் கூட்டுத் திட்டங்களை முடுக்கிவிட வழிவகுத்ததோடு, தென் கொரியத் தலைவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறவும் அவருக்கு உதவியது. இந்நிலையில் பிளவுபட்ட வட மற்றும் தென் கொரிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பின் 20 வது ஆண்டு நினைவு நாளுக்கு பின், கிம் யோ ஜாங்கின் இப்படியாக கருத்துக்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்