கேமராவில் சிக்கிய அரியவகை வெள்ளை மான்.. மீண்டும் வைரலாகும் வீடியோ.. ஆய்வாளர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மிகவும் அரியவகை வெள்ளை மானின் (white moose) வீடியோ ஒன்று மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உயிரியல் ஆர்வலர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சட்டுன்னு அதிகரித்த கொரோனா பாதிப்புகள்.. சீன அரசு எடுத்த முடிவு.. பரபரப்பான உலக நாடுகள்..!

இயற்கை எப்போதுமே நம்மை ஆச்சர்யப்படுத்த தவறுவதில்லை. கோடிக்கணக்கான விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களால் சூழப்பட்டுள்ளது இந்த உலகம். இருப்பினும் சுற்றுப்புற சூழல் காரணமாகவோ, அல்லது மனிதர்களின் செயல்பாடுகளின் விளைவாகவோ சில உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகின்றன. இப்படியான விலங்குகளை பாதுகாக்க தொடர்ந்து வன விலங்குகள் பாதுகாப்பு சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், உலகின் மிகவும் அரியவகை விலங்கினமாக கருதப்படும் வெள்ளை நிற மான் ஒன்றின் வீடியோ மீண்டும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரல் வீடியோ

இந்த வீடியோவில் ஒரு வெள்ளை மான், சிறிய குட்டையில் விழுந்து நீந்தி கரையில் ஏறி செல்கிறது. இந்த வீடியோவை முதன் முதலில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுவீடனை சேர்ந்த முனிசிபல் உறுப்பினரான ஹான்ஸ் நீல்சன் என்பவர் பகிர்ந்திருந்தார். விலங்குகள் ஆர்வலரான இவர் பல வருடங்கள் காத்திருப்புக்கு பிறகு இந்த அருமையான வீடியோவை எடுத்திருந்தார். இந்நிலையில், கேப்ரியல் கார்னோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இதுவரையில் 13 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த மானின் வீடியோ ஸ்வீடனின் வர்ம்லேண்ட் கவுண்டியில் எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக நிறமி குறைபாட்டை ஏற்படுத்தும் நோயான அல்பனிசம் மூலம் இந்த விலங்குகள் பாதிக்கப்படுவதாக சிலர் கூறிவந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் அதனை மறுத்திருக்கின்றனர். மாறாக இந்த அரியவகை மான்கள் இயல்பிலேயே மரபணு காரணமாக இப்படியான அடர் வெள்ளை நிறத்தை பெற்றிருப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

ஸ்வீடிஷ் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் எல்க் மற்றும் வெள்ளை நிற மான்களை கண்காணித்துவரும் பேராசிரியரான கோரன் எரிக்சன் இதுபற்றி பேசுகையில்,"இது மிகவும் அரிதானது. இந்த வெள்ளை நிற மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக நான் நம்புகிறேன்" என்றார். ஆன்டோரியோ இயற்கை வளங்கள் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த பகுதியில் வெள்ளை மான்களின் எண்ணிக்கை 50 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

 

Also Read | இந்தியா முழுவதும் டிராவல் செஞ்சு கின்னஸ் சாதனை.. ஆத்தாடி 3 மாசத்துக்குள்ள இவ்வளவு கிலோமீட்டரா.?

WHITE MOOSE, SWEDEN, வெள்ளை மான்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்