50 வருடம் முன் ராணி எலிசபெத்.. "தேவதைகள் தாலாட்டு பாடட்டும்".. அடக்கத்திற்கு பின் அரச குடும்பம் பகிர்ந்த அரிய புகைப்படம்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் கடந்த சில தினங்களுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.

Advertising
>
Advertising

Also Read | "மணமகன் தேவை" என நாளிதழில் வந்த விளம்பரம்.. கடைசி லைன்'ல ஐடி ஊழியர் பத்தி இருந்த விஷயம்.. "ஊரே இன்னைக்கி இத பத்தி தான் பேசுது"

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசு மரியாதை படி ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.

விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் சவப்பெட்டி மீது வைத்தார். ராணியின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அரச குடும்பம் தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராணியின் அரிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தங்களின் அஞ்சலியை செலுத்தி உள்ளது.

இந்த புகைப்படம், கடந்த 1971 ஆம் ஆண்டு, பால்மோரல் அருகே உள்ள மூர்லேண்டில் ராணி எலிசபெத் நடந்து செல்வது போன்று எடுக்கப்பட்டதாகும். ராணிக்கு மிகவும் பிடித்தமான இடம் இது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த புகைப்படத்தின் கேப்ஷனில், "May flights of Angels sing thee to thy rest' என்ற கவிஞர் ஷேக்ஸ்பியரின் வரிகள் இடம்பெற்றுள்ளது. உங்களின் ஓய்வுக்காக தேவதைகள் கூட்டம் தாலாட்டு பாடட்டும் என்று இந்த வாக்கியம் பொருள் தருகின்றது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ராணி எலிசபெத்தின் அரிய புகைப்படம் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | மனைவிக்கு கணவர் அனுப்பிய கடைசி மெசேஜ்.. 2 மாதம் கழித்து தெரிய வந்த உண்மை.. "ஒட்டுமொத்த குடும்பமும் ஆடி போச்சு"

QUEEN ELIZABETH, QUEEN ELIZABETH FUNERAL, RARE PICTURE OF QUEEN ELIZABETH, ராணி எலிசபெத்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்