"30 மில்லியன் ல ஒன்னு தான் இந்த கலர்ல இருக்கும்"..ஹோட்டலுக்கு வந்த பார்சலில் இருந்த அரிய வகை லாப்ஸ்டர்.. திகைத்துப்போன ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் மிக அரியவகை லாப்ஸ்டர் ஒன்று தவறுதலாக ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதனை கண்ட ஊழியர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertising
>
Advertising

கடல் உணவுகளில் பெரும்பாலானோரின் விருப்ப டிஷ்-ஆக இருப்பது லாப்ஸ்டர். கடலின் தரைப் பகுதியில் வசிக்கும் இந்த வகை உயிரினங்கள், நண்டுகளை போலவே, கால்களை கொண்டுள்ளன. உலகம் முழுவதும் கடல் உணவுகளின் வரிசையில் இந்த லாப்ஸ்டர்களுக்கு என பிரத்யேக இடம் இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த உணவகத்துக்கு அனுப்பப்பட்ட பார்சலில் மிகவும் அரியவகை ஆரஞ்சு நிற லாப்ஸ்டர் இருந்திருக்கிறது. இது அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை திகைக்க வைத்திருக்கிறது.

ஆரஞ்சு நிற லாப்ஸ்டர்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளது ரெட் லாப்ஸ்டர் உணவகம். இங்கு சமைப்பதற்காக கடலில் பிடிக்கப்பட்ட லாப்ஸ்டர்கள் டெலிவரி செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டலுக்கு பார்சல் ஒன்று வந்திருக்கிறது. அதில், இருந்த ஆரஞ்சு நிற லாப்ஸ்டரை ஊழியர்கள் பார்த்ததும், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

இதனை ஆய்வு செய்த ஹோட்டல் நிர்வாகிகள், உடனடியாக இதனை பாதுகாக்க முடிவெடுத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மிர்டில் கடற்கரையில் அமைந்துள்ள அக்வேரியத்துக்கு இந்த அரியவகை லாப்ஸ்டர் அனுப்பப்பட்டிருக்கிறது.

பெயர்

ரெட் லாப்ஸ்டர் உணவகம் இங்கு பரிமாறப்படும் செட்டர் பிஸ்கட்களுக்கு பெயர்போனது. ஆகவே, அதனை நினைவுகூரும் வகையில் இந்த அரியவகை லாப்ஸ்டருக்கு செட்டர் என பெயரிட்டு உள்ளனர் ஹோட்டல் நிர்வாகிகள். கடந்த வாரம் இந்த லாப்ஸ்டர், அக்வேரியத்துக்கு அனுப்பப்பட்டது.

மேலும், இந்த லாப்ஸ்டர் 30 மில்லியன்களில் ஒன்று என்கிறது இந்த உணவகம். இந்த வகை லாப்ஸ்டர் அசாதாரணமானது எனவும் கடலில் வேட்டையாடும் விலங்குகளின் கவனத்தை இந்த லாப்ஸ்டர் ஈர்க்கிறது எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

காரணம் என்ன?

ஐரோப்பிய கடல் மற்றும் மீன்வள நிதியத்தின் மீன்வள ஆராய்ச்சி அதிகாரியும் கடல் சுற்றுச்சூழல் நிபுணருமான டாக்டர் சார்லோட் இதுபற்றி பேசுகையில்,"கடல் லாப்ஸ்டர்களை ஆய்வு செய்யாமல் கண்டறிவது கடினம் என்றாலும் இந்த லாப்ஸ்டரின் தனித்துவமான நிறத்துக்கு பல்வேறு வகையான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக மரபணு மாற்றமாக இருக்கும் என சந்திக்கிறோம். பொதுவாக, லாப்ஸ்டரின் ஷெல்லில் இருக்கும் புரதங்கள் அதன் நிறத்தை தீர்மானிக்கின்றன. அதில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த நிறமாற்றத்திற்கு காரணம்" என்றார்.

இந்நிலையில், இந்த லாப்ஸ்டரின் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

LOBSTER, HOTEL, USA, லாப்ஸ்டர், ஹோட்டல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்