2.2 கோடிக்கு ஏலம்போன பிரபல ராப் பாடகரின் லவ் லெட்டர்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல ராப் பாடகரான டுபக் அமரு ஷகுர் (Tupac Amaru Shakur) -ன் கடிதங்கள் சமீபத்தில் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரே இரவில் 26 கேபினெட் அமைச்சர்களும் ராஜினாமா.. என்ன நடக்கிறது இலங்கையில்..?
டுபக் அமரு ஷகுர்
அமெரிக்காவின் நியூயார்க் நகர ஹார்லெமில் பிறந்தவர் டுபக் அமரு ஷகுர். 1960கள் மற்றும் 1970களில் பிளாக் பாந்தர் கட்சியின் தீவிர உறுப்பினர்களான அஃபெனி ஷகுர் மற்றும் பில்லி கார்லண்ட் ஆகியோரின் மகனான இவர் இளம் வயது முதலே, ஹக்கூ மற்றும் கடிதங்கள் எழுதுவதில் திறமையானவராக இருந்தவர்,
இசை மற்றும் பாடுவதில் ஆர்வமாக இருந்த டுபெக்கின் வாழ்க்கை பல திருப்புமுனைகளை கொண்டது. எதிர்பாராத விதமாக தன்னுடைய 25வது வயதில் டுபெக் மரணமடைந்தார்.
ஏலம்
இந்நிலையில் தன்னுடைய இளம் வயதில் டுபெக் எழுதிய கடிதங்கள் கடந்த மார்ச் 30 ஆம் தேதி லண்டனை சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான Sotheby's ல் ஏலத்திற்கு வந்தன. அவற்றுள் 11 வயதில், டுபெக், பிளாக் பாந்தர் கட்சியுடன் செயல்பட்டதால் சிறையில் இருந்த தனது காட்பாதருக்கு ஹைக்கூக்களை எழுதினார். "டுபக் ஷகுர், எதிர்கால சுதந்திரப் போராளி" என்று கையெழுத்திடப்பட்ட ஹைக்கூக்களின் கையெழுத்துப் பிரதி ஏலத்தில் $302,400 (இந்திய மதிப்பில் 2.2 கோடி ரூபாய்) க்கு விற்கப்பட்டது.
காதல் கடிதங்கள்
டுபெக் தன்னுடைய இளம் வயதில் எழுதிய காதல் கடிதங்களும் இந்த ஏலத்தில் விற்பனைக்கு வந்தன. இவை கோசிமா என்ற பெண்ணிடம் இருந்து பெறப்பட்டவை என தெரியவந்திருக்கிறது. அவற்றுள் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்-ற்கு அப்போது டுபெக் எழுதிய கடிதங்களும் இருந்திருக்கின்றன.
மேலும், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தன்னுடைய இசை வாழ்க்கை குறித்து அவர் பல்வேறு காலங்களில் எழுதிய கடிதங்களை அவரது ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கியுள்ளனர்.
கார்
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டுபெக்கின் மறைவு இசை உலகையே அதிரவைத்தது. வாகனத்தில் செல்லும்போது சுடப்பட்ட டுபெக், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி மரணமடைந்தார். அவர் கடைசியாக பயணித்த கார் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏலத்திற்கு வந்தது. டுபெக் பயன்படுத்திய கடைசி கார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 11 கோடி) ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டுபெக் எழுதிய கடிதங்கள் ஏலத்தில் விற்பனையாகி இருப்பது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
"போர் அடிக்குது.. மீன் பிடிக்க போவோம்".. இளைஞருக்கு அடிச்ச ஜாக்பாட்.. வைரல் வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கண்ணீருடன் ஏலத்துக்கு வந்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு உடைந்துபோன அதிகாரிகள்..!
- இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கே வந்தது இல்லயாம்.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா..!
- 1992-ல் அனுப்பப்பட்ட 'மெசேஜ்' ஒரு கோடிக்கு ஏலம்...! அப்படி 'என்ன' ஸ்பெஷல்...? - வோடபோனுக்கு அடித்த ஜாக்பாட்...!
- அடேங்கப்பா..! 18 கோடிக்கு ஏலம் போன டுவிட்டர் சிஇஓ-ன் ‘முதல்’ ட்வீட்.. அப்படி என்ன பதிவிட்டு இருந்தார்..?
- ‘ரூ.510 கோடிக்கு ஏலம் போன மதுபானக்கடை’!.. இந்த ஏலத்தை கேட்டது யாரு? இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க காரணம் என்னன்னு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!
- 'இந்த சீசனே நிலைமை ஒன்னும் சரியில்ல!!!'... 'வீரர்களுக்கு ஷாக் கொடுத்து'... 'அணிகள் எடுக்குப்போகும் அதிரடி முடிவு?!!'...
- 'ஆஹா... 'இது'க்குள்ள இவ்ளோ 'அர்த்தம்' ஒளிஞ்சிருக்கா!'.. அன்றே சொன்ன தல தோனி!.. சிஎஸ்கே-வின் அதிரடி திட்டம்... வீரர்கள் ஷாக்!.. என்ன நடந்தது?
- 'வெறும் 87 ரூபாய்க்கு ஏலத்திற்கு வரும் வீடுகள்!!!'... 'அதுவும் எந்த நாட்டுலனு தெரியுமா?'... 'அசத்தல் அறிவிப்புக்குப்பின் இப்படியொரு காரணமா?!!'...
- "என்னது!... 2021லயும் இதே நெலம தானா???"... 'ஐபிஎல் விதியால்'... 'CSKவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல்கள்!!!'...
- ‘100 வருடம் பழமையான 1 ரூபாய் நாணயத்துக்கு ரூ.25 லட்சமா?’.. ‘அடிச்சுது ஜாக்பாட்னு நினைச்சவங்களுக்கு’.. ‘ஆன்லைன் வர்த்தக நிறுவனம் கூறியது என்ன?’