'அமெரிக்க அதிபர் தேர்தல்'... 'அசத்தல் வெற்றியை பெற்றுள்ள தமிழர்'... அவர் யார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லியில் பிறந்த சேர்ந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 71 சதவிகிதம் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாட்டில் ராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஒபாமா போட்டியிட்ட போது அவரால் முன்மொழியப்பட்டவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து 3வது முறையாக அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வாகியுள்ளார்.
1973ஆம் ஆண்டு டெல்லியில் ஜூலை 19ஆம் தேதி பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அப்பா ராஜபாளையம். அம்மா தஞ்சாவூர். இவரது மனைவியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான். கிருஷ்ணமூர்த்தியின் தந்தை டெல்லியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைக்க அங்கேயே செட்டிலாகி விட்டனர்.
நியூயார்க்கில் பெற்றோர்களுடன் குடியேறிய கிருஷ்ணமூர்த்தி ஆய்வகம் மற்றும் மருத்துவமனையின் பொறுப்பாளராக பணியாற்றிய போது அரசியலில் ஈடுபட்டார். கடந்த 2004ஆம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரசாரத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டு ஒபாமாவின் தனி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி’...!! ‘தொடர்ந்து முன்னிலை வகிப்பது யார்?’... வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பு...!!! அமெரிக்க வாழ் தமிழர்கள் பகுதியில் யாருக்கு செல்வாக்கு???
- ‘இத்தன் வருஷமா செவ்வாய் கிழமை மட்டும் நடக்கும் அமெரிக்க தேர்தல்!’.. ‘இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சுவாரஸ்ய கதை இருக்கா?’
- 'அட!.. தேர்தல் பிரச்சாரத்திலும் புதுமை!'.. கமல்ஹாசன் அதிரடி!.. மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!.. பரபரப்பு தகவல்!
- 'ஒன் டூ ஒன்... இது தான் ஃபைனல்!'.. அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி... டிரம்ப் - பைடன் இடையே அனல் பறந்த விவாதம்!.. சைக்கிள் கேப்பில் இந்தியாவை வம்புக்கு இழுத்த டிரம்ப்!
- 'உங்க தொகுதி எது?'... 'புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள்'... தொகுதிகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
- திருமண அழைப்பிதழில்... தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த ரஜினி ரசிகர்!.. வைரல் இன்விடேஷன்... 'இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை'!
- வரலாற்று சாதனை!.. நியூசிலாந்து பொதுத் தேர்தலில்... பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரம்மாண்ட வெற்றி!.. சாத்தியமானது எப்படி?
- 2021 சட்டமன்ற தேர்தல்... பாஜக நிலைப்பாடு 'இது' தான்!.. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பரபரப்பு தகவல்!
- மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!.. தனித்து போட்டியா?.. கூட்டணியா?.. வெளியான பரபரப்பு தகவல்!
- "எனக்கு அப்படி என்ன வயசாயிடுச்சுனு நினைக்கிறீங்க?.. அழகான பெண்களை முத்தமிடுவேன்!".. தேர்தல் பிரசாரத்தில்... அதிபர் டிரம்ப் தெறிக்கவிட்ட 'ரொமான்ஸ்'!