வானத்தில் இருந்து கொட்டிய மீன் மழை.. அதிசயப்பட்டு போன மக்கள்.. அதுவும் பாலைவன பூமியில எப்படி?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் உள்ள பாலைவன நகரம் ஒன்றில் திடீரென மீன்மழை பெய்திருப்பது அந்த நகரத்தை சேர்ந்த மக்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஒவ்வொரு நாளும் இதை மறந்துடாதீங்க".. தனது உடல்நிலை குறித்து ரிஷப் பண்ட் உருக்கம்..!

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ளது லஜாமனு (Lajamanu) நகரம். சுற்றி பாலைவனம் நடுவே அமைந்திருக்கும் நகரம் இது. இங்கே சமீபத்தில் கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. சொன்னபடியே கன மழை தான் என்றாலும் வானத்தில் இருந்து மீன்கள் கொட்டியிருக்கின்றன. சாலைகளில் மீன்கள் மழையாக கொட்டியதால் அதனை பார்த்த மக்கள் ஒருநிமிடம் திகைத்து நின்றுவிட்டார்கள்.

மழைக்கு பிறகு அங்கிருந்த சிறுவர்கள் மீன்களை சிறிய ஜார்களில் சேகரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள லாஜாமானு உள்ளூர் மற்றும் மத்திய பாலைவன கவுன்சிலர் ஆண்ட்ரூ ஜான்சன் ஜப்பானங்கா, "எங்களது நகரத்தை நோக்கி ஒரு பெரிய புயல் வீசுவதை நாங்கள் பார்த்தோம். அது வெறும் மழை என்று நாங்கள் நினைத்தோம்.

Images are subject to © copyright to their respective owners.

இருப்பினும், மழைநீர் மட்டும் கொட்டவில்லை. பலத்த மழையுடன் ஆஸ்திரேலியாவில் மிகவும் பொதுவான நன்னீர் மீனான ஸ்பாங்கல்-ம் பொழிந்தது. அவை பெரும்பாலும் இரண்டு விரல்களில் தடிமன் இருந்தன. இன்னும் மக்கள் இங்குள்ள குளங்களை சுற்றி வருகின்றனர். குழந்தைகள் அவற்றை எடுத்து ஒரு பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு விளையாடுகின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இது ஒரு ஆச்சரியமான வானிலை நிகழ்வாக இருந்தாலும், இது இதற்கு முன்னரே நடைபெற்றிருக்கிறதாம். இதே நிகழ்வு 2010, 2004 மற்றும் 1974 வரை லாஜாமனுவில் நடந்திருக்கிறது. ஆறுகளில் இருந்து நீரையும் மீன்களையும் உறிஞ்சி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் கொட்டும் சூறாவளி போன்ற வலுவான நிகழ்வுகளால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் நம்புகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இருப்பினும், குயின்ஸ்லாந்து அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஸ்பாங்கல் அளவுக்கான ஒப்பீட்டளவில் உருவத்தில் பெரிய மீன்கள் மழையாக பெய்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், சாலைகளில் மீன்கள் கொட்டிக்கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

Also Read | முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் கமல் நெகிழ்ச்சி வாழ்த்து. என்ன சொல்லிருக்காரு பாருங்க.!!

AUSTRALIAN DESERT TOWN, RAIN FISH, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்