ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 14 கோடிக்கு ஏலம் போன ‘புறா’.. அப்படி என்ன ஸ்பெஷல்?.. ஒருவேளை இதுக்காகதான் இருக்குமோ..?
முகப்பு > செய்திகள் > உலகம்ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை ஏலம் எடுப்பதை விஞ்சும் அளவுக்கு புறா ஒன்று ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டின் தலைநகர் பெல்ஜியத்தில் புறா பந்தயம் நடத்தப்பட்ட வருகிறது. அதனால் அங்கு புறாக்களை வளர்க்கும் ஆர்வலர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பந்தயத்திற்காகவே வளர்க்கப்படும் இந்தவகை புறாக்களை பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் நடத்தப்பட்ட ஏலத்தில் ‘நியூ கிம்’ என்ற 2 வயது பெண் புறா ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2ம் தேதி இதன் ஏல தொகை 200 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின்னர் ஒன்றரை மணிநேரத்தில் இதன் மதிப்பு 13.1 லட்சம் யூரோக்களாக உயர்ந்தது. தென் ஆப்பிரிக்க குழு ஒன்று இந்த தொகைக்கு ஏலம் கேட்டது. கடந்த 2019ம் ஆண்டு ‘மார்ச்சில் ஆர்மாண்டோ’ என்ற ஆண் புறா 12.52 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. இதனை கிம் புறா முறியடித்தது.
ஆனாலும் ஏலம் கேட்பது தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஏலம் முடிய அரை மணிநேரம் இருந்த நிலையில், சீனாவை சேர்ந்த இரு பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்க ஆரம்பித்தனர். இதனால் கடைசியாக கிம் 16 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய். கிம் புறா கடந்த 2018ம் ஆண்டு மட்டுமே பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது. மேலும் பெல்ஜியத்தின் சிறந்த இளம் பறவை என்ற பட்டமும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஆண் புறாக்களை ஏலம் எடுப்பதில்தான் போட்டி அதிகம் இருக்கும். ஏனென்றால் அவை அதிக குஞ்சுகளை உருவாக்கும் திறன் படைத்தவை என்பதால்தான். அப்படி இருக்கையில் பெண் புறா இவ்வளவு தொகைக்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பந்தய புறாக்கள் 10 வயது வரை இனப்பெருக்கம் செய்யும் என்பதால், இந்த பெண் புறாவை இவ்வளவு விலை கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் இப்படி நடக்கலாம்'... 'நீ எனக்கு 2 வயசு குழந்தை டா, இப்போ உனக்கே குழந்தை இருக்கா'... நெகிழ்ந்து போன தாய்!
- 'பார்க்க பணக்கார லுக்'... 'கோடிகளில் புரண்ட பணம்'... 'எப்படி இத்தனை நாள் ஏமாற்றினார்?'... தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்!
- சீன ஆப்களுக்கு வெச்சாச்சு ஆப்பு! டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் உட்பட 59 ஆப்கள் தடை! இந்தியா அதிரடி!
- 'எல்லைப்' பிரச்னைகளை 'சீனா மதிப்பதில்லை...' 'அண்டை நாடுகளை' அச்சுறுத்துகிறது... 'சீனாவுக்கு' எதிராக அமெரிக்காவில் 'எழும் குரல்கள்...'
- 'டிசம்பர் 1ம் தேதி என்ன நடந்தது'?... 'மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ள விஞ்ஞானிகள்'...வுகான் மர்ம முடிச்சுகள் அவிழ்கிறதா? இல்லை இறுகுகிறதா?
- 'காரணம் கூறாமல்' சீனா மேற்கொள்ளும் 'ரகசிய நடவடிக்கை...' 'எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து...' 'அடுத்தடுத்த' நிகழ்வுகளால் 'பதற்றம்...'
- ‘சிவப்பு சாயம்’.. கால் வளையத்தில் ‘மர்ம எண்கள்’.. பாகிஸ்தானில் இருந்து பறந்த வந்த புறா?.. பீதியில் மக்கள்..!
- 'எங்களுக்கே இங்க ஒண்ணும் இல்ல’... ‘இந்தியர், சீனர்களுக்கு வழங்குவதை நிறுத்துங்க’... ‘அதிபர் ட்ரம்புக்கு கடிதம்’!
- VIDEO: திடீரென எங்கிருந்தோ வந்த புறாக்களால்... பயணிகள் அதிர்ச்சி!... பதறிப்போன விமான நிறுவனம்!
- "வாந்தி எடுத்தது ஒரு குத்தமாய்யா..." 'விமானத்தை' 3 மணி நேரமாக கழுவிய ஊழியர்கள்... 'கொரோனா' பீதியில் சக 'பயணிகள்'...