இந்திய புகழ்பெற்ற ‘கோஹினூர் வைரம்’ முதல் ‘300 வைரம் பதித்த’ நெக்லஸ் வரை .. "வாழ்ந்தா எலிசபெத் ராணி மாதிரி வாழணும்ப்பா"..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன் தினம் (செப்.8) மறைந்தார். பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த இவர், தனது 96வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். இந்நிலையில் ராணி அணிந்திருந்த இந்தியாவின் கோஹினூர் வைரல் குறித்த தகவல்களை இணையத்தில் நெட்டிசன்கள் அதிகம் பேசி வருகின்றனர்.

Advertising
>
Advertising

முன்னதாக கடந்த 1947 நவம்பர் 20-ம் தேதி அப்போதைய இளவரசி எலிசபெத்துக்கு திருமணம் நடைபெற்றபோது, இந்தியாவின் ஹைதராபாத் நிஜாமாக இருந்த எட்டாம் ஆசாப் ஜா, இளவரசி எலிசபெத்துக்கு லண்டனில் உள்ள கார்டியர் நகைக்கடையில் இருந்த 300 வைரங்கள் பதிக்கப்பட்ட பிளாட்டினம் நெக்லஸை பரிசாக அளித்தார். அந்த நகையை இளவரசியே தேர்ந்தெடுத்தார். எலிசபெத் தேர்வு செய்தார். பின்னர் ராணியாக பதவியேற்ற பிறகும் இந்த நெக்லஸையே அவர் அதிகம் விரும்பி அணிந்தார்.

இதேபோல் ராணி எலிசெபத்தின் விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் பிரபலமானது. இப்படிப்பட்ட இந்த கிரீடம்தான் அடுத்து யாருக்கு செல்ல போகிறது என்கிற பேச்சுகள் இருந்து வந்தன. இதனிடையே அடுத்த மன்னராக பதவியேற்க போகும் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் பவுல்ஸ்க்கு அந்த கிரீடம் அடுத்து செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து 14 ஆம் நூற்றாண்டு வாக்கில் வெட்டி எடுக்கப்பட்ட 105 கேரட் கோஹினூர் வைரம், உலகிலேயே மிகப்பெரிய வைரம்.  200 மில்லியன் டாலர் மதிப்புமிக்கதாக கூறப்படும் இந்த கோஹினூர் வைரம், இப்போது இருக்கும் தெலுங்காவின் வாரங்கலில் உள்ள ஒரு கோவிலில் சாமியின் ஒரு கண்ணாக பயன்படுத்தப்பட்டதாகவும், பின்னர் மாலிக் கஃபூர் (அலாவுதீன் கில்ஜியின் ஜெனரல்), சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங், அவது மகன் திலீப் சிங் என கைமாறி வந்ததாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

திலீப் சிங் ஆட்சியின் போதுதான் 1849ல் விக்டோரியா மகாராணிக்கு இந்த வைரம் வழங்கப்பட்டது, பின்னர் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் இந்த கோஹினூர் வைரத்தை இங்கிலாந்திடம் இருந்து திரும்பப் பெற இந்தியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு  வைரத்தை திருப்பி அளிக்க வாய்ப்பில்லை என இங்கிலாந்து அரசு திட்டவட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

QUEEN ELIZABETH II, KOHINOOR DIAMOND HISTORY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்