இதுவரை யாரும் கண்டிராத ராணி எலிசபெத் புகைப்படம்.. பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.

Advertising
>
Advertising

Also Read | இறுதி கணத்தில் அம்மாவின் சவப்பெட்டி மீது அரசர் சார்லஸ் வைத்த கடிதம்.. அதுல இருந்ததை படிச்சிட்டு கண்கலங்கிய பொதுமக்கள்..!

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, இத்தனை நாட்கள் அரசு மரியாதை படி, ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.

விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் சவப்பெட்டி மீது வைத்தார். ராணியின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு முன்பாக, இதுவரை யாரும் காணாத அவரது புதிய புகைப்படம் ஒன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 70 ஆண்டுகள் ராணியாக ஆட்சி புரிந்ததை கொண்டாடும் விதமாக, பிளாட்டினம் ஜூபிலி நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில், சிரித்த முகத்துடன் ராணி எலிசபெத் இருக்கும் புகைப்படத்தை ரனால்ட் மெக்கெக்னி என்ற புகைப்பட கலைஞர் எடுத்திருந்தார். மங்கலான நீல நிற உடை அணிந்து தலைமுடி நேர்த்தியாக சுருட்டப்பட்ட வகையில் இருக்கும் இதுவரை யாரும் கண்டிராத ராணி எலிசபெத் புகைப்படத்தினை இறுதி சடங்கை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது.

தனக்கு பிடித்த மூன்று அடுக்கு முத்து நெக்லஸ், முத்து கதைகள் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தபடி ராணி எலிசபெத் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | ராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் கார்.. "அட, இதுக்கு பின்னாடி இப்டி ஒரு சம்பவம் இருக்கா??"

QUEEN ELIZABETH, QUEEN ELIZABETH UNSEEN PICTURE, BUCKINGHAM PALACE, ராணி எலிசபெத்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்