'இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது'!.. உச்சகட்ட கோபத்தில் மகாராணி எலிசபெத்!.. ஹாரி மேகன் தம்பதி மீது வழக்குத் தொடர உத்தரவு!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி - மேகன் தம்பதிக்கும், மகாராணி எலிசபெத்துக்கும் இடையே பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம், இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி அறிவித்தனர். அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க விரும்புவதால் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக அரண்மனை செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த தம்பதி அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய பிறகு, மகாராணி எலிசபெத் மீதும், அரச குடும்பத்தின் மீதும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
குறிப்பாக, ஓப்ரா வின்ஃப்ரே பேட்டியில், வெளிப்படையாக அரச குடும்பத்தின் மீது ஹாரியும், மேகனும் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதுவும், அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்கள் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து விமர்சித்ததாக அவர்கள் கூறிய குற்றச்சாட்டால் அரச குடும்பம் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சியடைந்தார்கள்.
அப்போதும், மகாராணி எலிசபெத், தன் பேரன் ஹாரி மீது அதிக அன்பை வெளிப்படுத்தி வந்தார். அந்த வகையில், ஹாரிக்கு இரண்டாவது மகள் பிறந்தபோது, அரச குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு ஹாரி மேகன் தம்பதியருக்கு வாழ்த்துச் சொன்னது.
இந்த நிலையில் தான், ஹாரியும், மேகனும் Finding Freedom என்ற பெயரில் தங்கள் சுயசரிதையை அடுத்த ஆண்டு புத்தகமாக வெளியிட உள்ளார்கள். அந்த புத்தகத்தில் தற்போது கூடுதலாக ஒரு அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், தங்கள் மகனது நிறம் குறித்து அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் இனவெறுப்பு தாக்குதல் நடத்தியதைக் குறித்து தாங்கள் புகாரளித்தபோது, மகாராணி எலிசபெத் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த தகவல் மகாராணி எலிசபெத்துக்கு தெரியவரவே, இதுவரை பொறுத்தது போதும், சட்ட ரீதியாக ஹாரி - மேகன் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுங்கள் என அரண்மனையின் மூத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
மேலும், ஹாரி மேகனின் புத்தகத்தை வெளியிட இருக்கும் நிறுவனத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. அதன்படி, அந்த புத்தகத்தில் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டு, நேரடியாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தால், அது அவதூறாகவும், அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையின் உரிமைகளை மீறிய செயலாகவும் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு ‘பெண்’ குழந்தை பிறப்பு.. குழந்தைக்கு ‘பெயர்’ என்ன தெரியுமா..?
- "நாங்களும் செய்வோம்-ல..." 'பேரனின் 'ஏட்டிக்கு போட்டி' அறிவிப்பால்... அதிர்ச்சியில் மகாராணி'!!.. இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி vs ராணி எலிசபெத்!.. தொடரும் பனிப்போர்!
- 'பக்கிங்ஹாம்' அரண்மனையில் இருந்து 'திருடப்பட்ட' விலையுயர்ந்த பொருட்கள் .. EBay தளத்தில் விற்பனைக்கா? சிக்கிய இளவரசியின் 'பணியாளர்'!
- 'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி!'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்!... என்ன நடந்தது?
- ஹஸ்பண்டுனா ‘இப்படி’ இருக்கணும்... முகமெல்லாம் ‘சிரிப்பாய்’ மேகன்... என்ன செஞ்சாருனு நீங்களே பாருங்க... வைரல் வீடியோ...!
- 'சொத்து, பதவி வேண்டாம்'...'அரச குடும்பத்திலிருந்து விலக காரணம் என்ன?... மவுனம் கலைத்த ஹாரி!
- ‘இளவரசர்’ ஹாரி - மேகன் தம்பதியின் ‘திடீர்’ அறிவிப்பால்... ‘அதிர்ச்சியில்’ இங்கிலாந்து ‘அரச’ குடும்பம்...