"இதை நீ படிக்கும்போது".. பேரனுக்கு மறைந்த இங்கிலாந்து ராணி எழுதிய கடிதம்.. நெகிழ்ந்துபோன மக்கள்.. வைரல் Pic..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தின் ராணியாக நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் தனது பேரனும் வேல்ஸ் மாகாணத்தின் இளவரசருமான வில்லியமிற்கு எழுதிய பழமையான கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார்.

இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. இங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் எலிசபெத் தனது பேரனும் வேல்ஸ் மாகாணத்தின் இளவரசருமான வில்லியமிற்கு எழுதிய பழைய கடிதம் ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த கடிதம் ரியல் ராயல் மெயில் எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில்,"வில்லியம், நீ  ஒவ்வொரு நாளும் இதைத் திறப்பதில் மகிழ்ச்சி அடைவாய் என்று நம்புகிறேன், பாட்டி" என கைப்பட எழுதியிருக்கிறார் இரண்டாம் எலிசபெத்.

இந்த கடிதம் 1997 ஆண்டுவாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கடிதத்துடன் காலண்டர் ஒன்றும் இளவரசர் வில்லியமிற்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் ஏலத்திற்கு வந்த இந்த கடிதத்தை முன்னாள் இளவரசி டயானாவின் ஊழயர் ஒருவர் வாங்கியதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் எலிசபத் தனது பேரனுக்கு எழுதிய பழைய கடிதத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

QUEEN ELIZABETH, PRINCE WILLIAM, LETTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்