உலகையே 'மிரட்டும்' கொரோனாவை... 'மிகக்குறைந்த' உயிரிழப்புடன் கட்டுப்படுத்தி... 'வியப்பை' ஏற்படுத்தியுள்ள 'நாடுகள்!'... எப்படி சாத்தியமானது?...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் பெரிய வளர்ந்த நாடுகளே நிலைகுலைந்து போயுள்ள வேளையில் 2 சிறிய நாடுகள் குறைவான உயிரிழப்புடன் பாதிப்பை கட்டுப்படுத்தி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், பெரிய வளர்ந்த நாடுகளே வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து போயுள்ளன. ஆனால் சிறிய மற்றும் பணக்கார நாடுகளான கத்தார், சிங்கப்பூர் ஆகியவை குறைந்த உயிரிழப்புடன் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகின்றன. இந்த 2 நாடுளிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கொரோனா உயிரிழப்பு 0.1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதற்கு நோயாளிகளின் உடல் நலன் மற்றும் சுகாதார அமைப்பின் திறன் ஆகியவையே முக்கியமான காரணங்கள் என  சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வளமான நாடுகளான இவை இரண்டும் தேவையான அளவு கொரோனா பரிசோதனை கருவிகள், படுக்கை வசதிகள் ஆகியவற்றை கொண்டுள்ளன. இதுவரை கத்தாரில் 16 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 12 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது 0.07 சதவிகிதமாகும். சிங்கப்பூரில் கொரோனாவால் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இறப்பு விகிதம் 0.093 சதவிகிதமாக உள்ளது. கத்தார் மற்றும் சிங்கப்பூரை அடுத்து  சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், வியட்நாமில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தாலும் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்