"மொத்தமா 29 நாய்கள்.." துப்பாக்கியுடன் நுழைந்த இரண்டு பேர்.. அடுத்தடுத்து நடந்த கலங்க வைக்கும் சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்கத்தார் நாட்டில், விலங்குகள் மீட்பு மையத்தில் இருந்த 29 நாய்களுக்கு நேர்ந்த துயரம், கடும் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
கத்தாரின் தலைநகரமான டோஹோ என்னும் பகுதியில், விலங்குகள் மீட்பு மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கே கடந்த சில தினங்களுக்கு முன், இரண்டு பேர் அத்துமீறி நுழைந்துள்ள நிலையில், கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு, சுமார் 29 நாய்களை அவர்கள் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, மற்ற சில நாய்களையும் அவர்கள் காயப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக, கத்தார் நாட்டில் உள்ள உயர் அதிகாரிகள் யாரும் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றது. தங்களது மகன்களை நாய்கள் கடித்ததன் பெயரில், ஆவேசத்துடன் வந்த இரண்டு பேர், துப்பாக்கியுடன் உள்ளே சென்று நாய்களை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அந்த இரண்டு பேரின் கொடிய செயலால், தற்போது 29 நாய்கள் உயிரிழந்திருக்கும் சம்பவத்திற்கு, மிருகங்கள் நல அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கியுடன் அங்கே வந்த நபர்கள், அங்கிருந்த காவலாளிகளை துப்பாக்கி காட்டி மிரட்டி விட்டு, பின்னர் உள்ளே நுழைந்து சுட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக, விலங்குகள் மீட்பு மையம் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, "இரண்டு பேர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்ததை பார்த்து காவலாளிகள் பயந்து விட்டனர். மேலும், அவர்கள் துப்பாக்கியுடன் நாய்களை சுட ஆரம்பித்த நபர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன்களைக் கடித்ததன் பெயரில், விலங்குகள் மீது கோபத்தில் இருந்த இரண்டு பேர், விலங்குகள் மீட்பு மையத்திற்குள் புகுந்து நாய்களை சுட்டுக் கொன்ற சம்பவம், கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் பலர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
Also Read | “ஒரு காலத்துல லட்சக்கணக்குல நடந்த உற்பத்தி” .. சென்னையில் பிரபல கார் நிறுவனத்தின் கடைசி கார்..?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மகள் பிறந்த நேரம்.. அபுதாபி லாட்டரி டிக்கெட் வாங்கிய இந்தியர்.. ஓவர் நைட்டில் அடித்த ஜாக்பாட்..!
- ‘பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு... சீக்கிரம் நல்ல செய்தி வரும்..!’ ஆப்கான் மக்களை நிம்மதி பெருமூச்சு விட வச்ச நாடு..!
- உலகையே 'மிரட்டும்' கொரோனாவை... 'மிகக்குறைந்த' உயிரிழப்புடன் கட்டுப்படுத்தி... 'வியப்பை' ஏற்படுத்தியுள்ள 'நாடுகள்!'... எப்படி சாத்தியமானது?...