எங்களுக்கும் உக்ரைனுக்கும் நடக்குற போர்ல யாராவது குறுக்க வந்தா.. வரலாறு காணாத அழிவ சந்திப்பாங்க.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடும் எச்சரிக்கை

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா: ரஷ்யா உக்ரைன் போரில் வேறு எந்த நாடாவது மூக்கை நுழைத்தால் முகமே இருக்காது என்ற ரீதியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

தொடங்கியது ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவில் எந்த பொருட்களின் விலை உயர போகுது? நிபுணர்கள் எச்சரிக்கை

உலகின் மிக பெரிய நாடாக இருந்த சோவியத் யூனியன் 1991-ஆம் ஆண்டு பல சிறு நாடுகளாக பிரிந்தது. சோவியத் யூனியனின் மிக பெரிய பகுதி ரஷ்யாவாக உருவெடுத்தது. அதோடு உக்ரைன், கஜகிஸ்தான் என பல சிறு நாடுகளும் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவிற்க்கும் உக்ரைனிற்கும் போர்:

சுகந்திர நாடானாலும் அவை அனைத்தும் ரஷ்யாவிற்கு ஆதாரவாகவே செயல்பட்டன. தற்போது சோவியத் யூனியன் பிரிய காரணமாக இருந்த நேட்டோ படைகளோடு உக்ரைன் சேர நினைத்த நிலையில் ரஷ்யாவிற்க்கும் உக்ரைனிற்கும் போர் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் எமெர்ஜென்சி:

அதோடு, கடந்த 2014-ஆம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றிய போது இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரைன் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக உக்ரைனில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

புட்டின் கடும் எச்சரிக்கை:

உக்ரைனுக்கு நேட்டோ படைகளும், அமெரிக்காவும் சப்போர்ட்டாக உள்ளது. ரஷ்யாவிற்கு பாகிஸ்தான் சீனா இலங்கை ஆப்கானிஸ்தான் என அத்தனை அண்டை நாடுகளும் ஆதரவாக உள்ளது. இதில் இந்தியா வெளிப்படையான நிலைப்பாடு எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும்:

அவர் வெளியிட்ட அறிக்கையில், 'எங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் பிற நாட்டினர் யாராவது தலையிட்டால் அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும்' என அறிவித்துள்ளார்.

ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர்:

அதுமட்டுமில்லாமல் தற்போது வரை ரஷ்யா கருங் கடலை ஒட்டியுள்ள முக்கியமான துறைமுகங்களை கைப்பற்ற தீவிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். கூடிய விரைவில் ரஷ்யாவால் கைப்பற்றப்படும் முதல் நகரமாக ஒடேசா இருக்கும் என கூறப்படுகிறது.

வெடிகுண்டு தாக்குதல்:

மேலும், உக்ரைன் தலைநகர் Kyiv-வில் உள்ள #விமான நிலையத்தை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகரம் முழுவதும் வெடிகுண்டு தாக்குதலின் பயங்கர சத்தமாக இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. கூடுதலாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் 'ஏவுகணைகளால் எங்களது தலைநகரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது' என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும்.. வீடு வீடாக சென்று கேக் வழங்கிய சுயேச்சை வேட்பாளர்.. என்ன காரணம்?

PUTIN, RUSSIA UKRAINE WAR, ரஷ்யா, உக்ரைன், ரஷ்யா உக்ரைன் போர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்