'தாலிபான்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு... ' ஆப்கான் மக்களை 'இப்படி' சொல்லிட்டாரே...! 'எங்க நாட்டுக்கு' அவங்க வர்றதுல விருப்பம் இல்ல...! - சர்ச்சை 'கருத்தை' வெளியிட்ட நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானில் நடைபெற்ற உள்நாட்டு போரில் தாலிபான் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆப்கான் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது , 'ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மக்கள் அனைவரும் அகதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் கூட இருக்கலாம்.

தெற்காசிய நாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்கானிலிருந்து வரும் மக்களை அனுமதிக்க நான் விரும்பவில்லை. எங்கள் நாட்டில் நுழைய கட்டாயமாக விசா வேண்டும். விசா இல்லாமல் அவர்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது' எனக் கூறியுள்ளார்.

உயிருக்கு பயந்து குழந்தைகளும், பெரியோர்களும் சொந்த நாட்டை விட்டு வெளியேறி தஞ்சம் புகும் சமயத்தில் புதின் கூறிய சம்பவம் உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், 'ஆப்கானில் தாலிபான்கள் இதுவரை கூறிய வாக்குறுதியில் உறுதியாக இருந்துள்ளனர். அவர்கள் அறிவித்த போர் நிறுத்தம், அனைவருக்கும் பொது மன்னிப்பு, பேச்சுவார்த்தைகள் இவற்றை எல்லாம் அவர்கள் செயல்படுத்தி வருவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று தாலிபான்களுக்கு ஆதரவாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்