இப்போ உலகத்துலயே அதிகாரமிக்க 'அதிபரா' இருக்கலாம்...! 'ஆனா ஒருகாலத்துல காசு இல்லாம கார் ஓட்டிருக்காரு...' - 30 வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது பண நெருக்கடியினால் கார் டிரைவராக வேலை பார்த்ததாக உலகின் அதிகாரமிக்க அதிபர் ஆச்சரியப்பட வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

சோசலிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் கடந்த 1991-ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது. அதற்குப்பின் ரஷ்யா உட்பட பல குடியரசு நாடுகள் உருவானது.

அப்போது சோவியத் ஒன்றியத்தின் உளவு படையில் பணியாற்றிய ரஷ்யாவின் தற்போதைய அதிபர் புடின், சோவியத் ஒன்றிய வீழ்ச்சியை மிகப்பெரும் அரசியல் பேரழிவாக கருதுகிறார்.

இந்த நிலையில் சோவியத் ஒன்றிய வீழ்ச்சியின் போது, பணம் இல்லாமல் தவித்ததாகவும், அப்போது தான் கார் டிரைவராக பணியாற்றியதாக புடின் தற்போது கூறியுள்ளார்.

சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி குறித்த ஆவணப்படம் ஒன்றில் அவர் இந்த தகவலை கூறியுள்ளார். அந்த ஆவணப்படத்தில் அவர் பேசும்போது, 'உண்மையை கூற வேண்டும் என்றால் இது குறித்துப் பேசுவதில் எனக்கு துளிக்கூட விருப்பமில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுதான் நடந்தது. அதுதான் சத்தியம்.

முப்பது வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சோவியத் யூனியன் வீழ்ச்சி என்பது பெரும்பாலான பொதுமக்களுக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்கியது.

அந்த நேரத்தில் நான் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை இருந்தது. இதற்காக நான் தனியார் நிறுவனம் ஒன்றில் கார் டிரைவராக பணியாற்றினேன். இவ்வாறு புடின் பேசினார்.

உலகின் மிகவும் அதிகாரமிக்க வலிமையான தலைவர்களில் ஒருவராக அறியப்படும் புடின், 30 ஆண்டுகளுக்கு முன்பு பணம் சாம்பாதிக்க கார் டிரைவராக பணியாற்றினார் என்கிற தகவல் உலக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

PUTIN, CAR DRIVER, SOVIET UNION COLLAPSED, சோவியத் யூனியன், ரஷ்ய அதிபர், புடின், கார் டிரைவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்