10 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் லட்சக் கணக்கில் பரிசு.. ரஷ்ய அதிபர் வெளியிட்ட அறிவிப்பு.. புதினின் மாஸ்டர் பிளான்..!
முகப்பு > செய்திகள் > உலகம்10 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு லட்சக்கணக்கில் பரிசுத்தொகை அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் காரணம் தான் இப்போது உலகம் முழுவதும் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
ஒருபுறம் மக்கள் தொகை பெருக்கம் பல நாடுகளை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி வரும் நிலையில், சில நாடுகள் குறைந்து வரும் மக்கள் தொகையை பெருக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. முன்னதாக சீனாவும் மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டங்களை அமல்படுத்திவருகிறது. இந்நிலையில், ரஷ்ய அரசும் இதே மாதிரி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. சொல்லப்போனால் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலின் கொண்டு வந்த ஒரு திட்டத்தை மீண்டும் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறார் விளாடிமிர் புதின்.
Mother Heroine
இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்யாவின் மக்கள் தொகை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இதனை எதிர்கொள்ளும் விதமாக அப்போதைய ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் 'Mother Heroine' எனும் திட்டத்தை அமல்படுத்தினார். அதாவது ரஷ்ய பெண்களில் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு இந்த திட்டமும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யாவில் மக்கள் தொகை எண்ணிக்கை சமீபத்தில் கணிசமாக குறைந்திருக்கிறது. 2022-ஆம் ஆண்டில் அந்நாட்டில் மக்கள் தொகையில் 4 லட்சம் குறைந்தது. இதனால் ரஷ்யாவின் மொத்த மக்கள்தொகை 145.1 மில்லியனாக குறைந்திருக்கிறது.
புதின்
ரஷ்யாவில் மக்கள் தொகை கணிசமாக குறைந்துவரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் Mother Heroine திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார். அதன்படி ரஷ்ய தாய்மார்களில் 10 குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு 1 மில்லியன் ரூபிள் (இந்திய மதிப்பில் 13 லட்ச ரூபாய்) வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பின்மூலம், தங்களது 10வது குழந்தைக்கு ஒரு வயதாகும் போது இந்த தொகை தாய்மார்களுக்கு வழங்கப்படும். அதே நேரத்தில் மற்ற குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்துக்காக புதின் எடுத்திருக்கும் இந்த முடிவு குறித்து உலகமே பரபரப்புடன் பேசிவருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குடும்பமா சேர்ந்து கொள்ளை.. "அடிச்ச பணத்துல 2 கோடி ரூபாய்க்கு வீடு.. கூடவே" அதிர வைத்த வாக்குமூலம்
- "மாசம் 50 ஆயிரம் தான் சம்பளம், ஆனா.." அரசு ஊழியர் வீட்டை திறந்ததும்.. அரண்டு போன அதிகாரிகள்
- வீடு ஃபுல்லா கோடி கணக்குல பணம்.. "ஆனா அது என் பணமே இல்ல.." நடிகை விளக்கம்
- சாலை ஓரத்துல கிடந்த Bag.. உள்ள கட்டுக்கட்டா பணம்.. கொஞ்சம் கூட யோசிக்காம போலீஸ் கான்ஸ்டபிள் செஞ்ச காரியத்தால் நெகிழ்ந்துபோன அதிகாரிகள்..!
- வீட்டு வாசல்ல சோர்வாக நின்ன கிளி.. காப்பாத்தியவருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. கர்நாடகாவில் நடந்த சுவாரஸ்யம்..!
- ஆத்தி.. Quarter Finals-ஏ முடிஞ்சு போச்சு.. ஆனா இப்பதான் போலி IPL -னு தெரிஞ்சிருக்கு!.. மோசடி கும்பலா..?
- பாகுபலி சமோசா-வா? என்ன இப்டி இருக்கு??.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. சுவாரஸ்ய பின்னணி!!
- "பேரக் குழந்தை பாத்த வயசுல.." பெண் போட்ட பிளான்.. வேற லெவல் வேஷம் போட்டு பயங்கரமாக பாத்த மோசடி வேலை..
- ‘ஒரே ஒரு டூத் பிரஷ் பில்’.. வெளிவந்த பல வருச மோசடி.. சென்னை சூப்பர் மார்க்கெட் ஓனருக்கு ‘ஷாக்’ கொடுத்த ஊழியர்..!
- "40 வருஷமா பெருசு ஆகிட்டே போகுது.." திகில் கிளப்பும் 'மர்ம' பள்ளம்.. 282 அடி ஆழம் சொல்லும் 6.5 லட்ச வருட ரகசியம்??.. பின்னணி என்ன?