'புதினுடன் வந்த கவர்ச்சியான இளம்பெண்'... 'அது யாருக்கு போட்ட ஸ்கெட்ச் தெரியுமா'?... 'இப்படி கூட தலைவர்கள் செய்வார்களா'?... வெளியான சுவாரசிய தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முன்னாள் வெள்ளை மாளிகைச் செயலரான Stephanie Grisham என்பவர் எழுதியுள்ள புத்தகம் தான் தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயான அரசியல் என்பது நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. உலகின் சக்திவாய்ந்த நாடாகவும், சர்வதேச காரியங்களைத் தீர்மானிக்கும் கிங் மேக்கராகவும் மாறுவதில் பல நாடுகள் முனைப்புக் காட்டி வருகிறது. அந்த வகையில் வல்லரசு நாடான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கும் எப்போதுமே பனிப்போர் என்பது இருந்து கொண்ட தான் இருக்கிறது.

அந்த வகையில் ஜப்பானில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கவனத்தைத் திசை திருப்ப சில விஷயங்களைச் செய்துள்ளார் என, முன்னாள் வெள்ளை மாளிகைச் செயலரான Stephanie Grisham என்பவர், தான் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதின் ஒரு கவர்ச்சியான பெண்ணை மொழிபெயர்ப்பாளராக அழைத்து வந்ததாகத் தெரிவித்துள்ள Stephanie, அவர் ட்ரம்ப்பின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே அப்படிச் செய்ததாகத் தான் தீர்க்கமாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார். Stephanie தனது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணின் பெயர் Daria Boyarskaya எனத் தெரியவந்துள்ளது.

விஷயம் இப்படி இருக்க Stephanieயின் இந்த கூற்றை புதினின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov மறுத்துள்ளார். இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், ''புதினின் மொழிபெயர்ப்பாளரைத் தேர்ந்தெடுப்பது வெளியுறவுத் துறை அமைச்சகம் தான். அதற்கும் புதினுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

புதின் இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் தனது மூக்கை நுழைக்க மாட்டார்'' என்று Dmitry Peskov திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் விஷயம் எப்படியோ, Stephanie தனது புத்தகத்தில் புதின் குறித்து இவ்வாறு எழுதி இருப்பது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்