"புதின் அடுத்து இந்த வெப்பன் தான் யூஸ் பண்ண போறாரு.. கவனமா இருக்கனும்".. பைடன் தூக்கிபோட்ட குண்டு.. பதறும் உலக நாடுகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டின் மீது கெமிக்கல் (Chemical) மற்றும் பயாலஜிக்கல் (Biological) குண்டுகளை ரஷ்யா பயன்படுத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

"ஹிட்லர் கிட்ட இருந்தே 4 தடவை தப்பிச்ச மனுஷன்"... "இப்படி பண்ணீட்டீங்களே".. ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் அமைச்சர்..!

தொடரும் போர்

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதனை அடுத்து சுமார் ஒன்றரை இலட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தனர். தங்களது நாட்டின் உட்கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

இதுவரையில் இந்த போரின் காரணமாக 925 உக்ரைன் மக்கள் உயிரிழந்ததாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

ஜோ பைடன்

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று பேசிய அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"அமெரிக்கா கெமிக்கல் மற்றும் பயாலஜிக்கல் ஆயுதங்களை ஐரோப்பாவில் வைத்துள்ளதாக ரஷ்யா கூறி வருகிறது. ஆனால் அவை உண்மை அல்ல. மாறாக, உக்ரைனில் இந்த இரண்டு ஆயுதங்களையும் ரஷ்யா பயன்படுத்த இருப்பதற்கான சாத்தியங்கள் துள்ளியமாக தெரிகின்றன. ஆகவே நாம் கவனமாக இருக்கவேண்டும்" என தெரிவித்தார்.

இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் இதுவரையில் பதில் அளிக்கவில்லை. இருப்பினும், முன்னதாக உக்ரைன் நாட்டில் வேக்கம் குண்டுகளை ரஷ்யா உபயோகித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார தடை

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய அதிபர் புதின் மீது நேரடியாக குற்றம் சாட்டி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தங்களது நாடுகளில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா கெமிக்கல் மற்றும் பயாலஜிக்கல் ஆயுதங்களை உபயோகப்படுத்த இருப்பதாக ஜோ பைடன் தெரிவித்திருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பத்மஸ்ரீ விருது நிகழ்வில் பிரதமர் முன் விழுந்த 126 வயது முதியவர்.. யார் இந்த சுவாமி சிவானந்தா?..

PUTIN, VLADIMIR PUTIN, CHEMICAL WEAPONS, UKRAINE, BIDEN, RUSSIA UKRAINE CRISIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்