ஏர்போர்ட் பாத்ரூமில் நாய்க்குட்டி.. கூடவே இருந்த லெட்டர்.. படிச்சு பாத்துட்டு கண்கலங்கிய அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் விமான நிலைய பாத்ரூமில் இருந்து குட்டி நாய் ஒன்று அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் இருந்த கடிதம் தான் பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

Also Read | நண்பன் மரணமடைந்த சோகம்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பில் பரமக்குடி..!
அந்த விமான நிலையம் வழக்கம்போல பரபரப்புடன் தான் அன்றும் இருந்தது. விமானத்திற்கு காத்திருந்த பெண்மணி ஒருவர், இயற்கை உபாதைக்காக அங்குள்ள கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது ஒரு கழிவறையில் நாய்க்குட்டியின் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே பதறிப்போன அவர் கதவை திறக்க உள்ளே பிறந்து 3 மாதங்களே ஆன, நாய்க்குட்டி இருந்திருக்கிறது. கூடவே ஒரு கடிதமும். இதனால் குழம்பிய அந்த பெண்மணி கடிதத்தை பிரித்துப் பார்த்திருக்கிறார். அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் அவரை கண்ணீர் சிந்த வைத்திருக்கின்றன.
கடிதம்
நாயுடன் இருந்த கடிதத்தில்,"வணக்கம். எனது பெயர் செவி. எனது உரிமையாளர் தவறான நபருடன் உறவில் இருந்ததால் என்னை விமானத்தில் ஏற்றிச் செல்ல அவரால் முடியவில்லை. அவள் முழு மனதுடன் என்னை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிச்சியடைந்த அவர் அதே கடிதத்தின் பின்பகுதியில் இருந்தவற்றையும் படித்திருக்கிறார்.
அதில்,"நாங்கள் சண்டையிட்டபோது எனது முன்னாள் காதலன் என் நாயை தாக்கினார். எனது அன்புக்குரிய நாய்க்கு மருத்துவர் உதவி தேவைப்படலாம். நான் செவியை மிகவும் நேசிக்கிறேன். தயவுசெய்து அவரை நேசிக்கவும், கவனித்துக் கொள்ளவும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மீட்பு
தனது முன்னாள் காதலனிடமிருந்து தனது நாயை காப்பாற்ற முடிவெடுத்த அந்த பெண், வேறு வழியின்றி விமான நிலைய பாத்ரூமில் தனது நாயை விட்டுச் சென்றதை அறிந்த பெண்மணி உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளை அழைத்திருக்கிறார். இதன் மூலம் லாஸ் வேகாஸில் உள்ள கானர் மற்றும் மில்லியின் நாய் மீட்பு மையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர் விமான நிலைய அதிகாரிகள்.
இதனையடுத்து மீட்பு மைய ஊழியர்கள் செவியை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த விஷயம் சமூக வலை தளங்களில் பரவ, செவியின் மருத்துவ செலவுகளுக்கு பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எப்படி இவ்ளோ நகை, பணம் கெடச்சது?’.. கணவன் சொன்ன பதிலை கேட்டு ‘ஷாக்’ ஆன மனைவி.. உடனே செஞ்ச சிறப்பான காரியம்..!
- ஏர்போர்ட்ல 4 நண்பர்கள் செஞ்ச வினோத செயல்.. 'நியாயமா இதெல்லாம்' என கேள்வியெழுப்பும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!
- தலைக்குள் தங்கம்.. என்ன ட்ரிக்ஸ்-ஆ யோசிக்கிறாங்க.. விக்கை வேட்டையாடிய கஸ்டம்ஸ் ஆபிசர்..!
- 14 வருஷமா வீட்டுக்கு போகாம ஏர்போர்ட்லயே தங்கியுள்ள நபர்.. இதுக்கா இப்படி ஒரு முடிவு..?
- 'உங்க ஷூவை ஏன் அவர்கிட்ட கொடுத்தீங்க?".. ஏர்போட்ல திருதிருன்னு முழிச்ச நபர்.. கஸ்டம்ஸ் அதிகாரிகள் காட்டிய அதிரடி..!
- "சார்.. உங்க Bag-அ செக் பண்ணணும்".. கம்பீரமான IPS ஆபிசர்.. ஆனா கொழந்த மனசுப்பா இவருக்கு.. ஏர்போர்ட்டில் நடந்த வேடிக்கை சம்பவம்..
- விமானம் ஏறிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. "இந்த வாய்ப்பு எல்லாம் எங்களுக்கு எப்போ கிடைக்குமோ??".. ஏங்கும் நெட்டிசன்கள்
- "பை ஃபுல்லா அதுதான்".. கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் கையும் பையுமாக சிக்கிய வெளிநாட்டுப்பெண்..!
- பெங்களூருவில் 426 பேரின் உயிரை காத்த 42 வயது ஹீரோ.. 3000 அடி உயரம்.. கடைசி நேரத்தில் பறந்த மெசேஜ்
- ஜஸ்ட் மிஸ்! பெங்களூரில் மோத இருந்த இரு விமானங்கள்.. கடைசி நொடியில் எடுத்த முடிவு.. வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்