‘இந்திய நிறுவனம் தயாரிக்கும் கொரோனா மருந்து’.. ‘92 உலக நாடுகளுக்கு வழங்க முடிவு’.. ‘ஒரு டோஸின் விலை இதுதான்’!
முகப்பு > செய்திகள் > உலகம்சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவது தொடர்பாக பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனமாக
மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த சீரம் நிறுவனம் விளங்குகிறது.
இந்த நிறுவனம் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள 'கோவிஷீல்டு' என்கிற கொரோனா தடுப்பூசி மருந்தை 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதற்கு முனைப்பு காட்டி வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்தும் வருகிறது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் குறைந்த வருவாயுள்ள நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்குவது தொடர்பாக சீரம் நிறுவனம் பில் அண்டு மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீரம் நிறுவனம் 10 கோடி டோஸ் 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்தை உள்நாட்டிலும் வளரும் பல நாடுகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மருந்து கண்டு பிடிப்பதற்காக சீரம் நிறுவனம் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து நிமிடத்திற்கு 500 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்து தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்தின் விலையையும் இத்துடன் அறிவித்துள்ளது. அதன்படி 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்து ஒரு டோஸ் 225 ரூபாய் என்கிற விலையில் 92 நாடுகளில் விற்பனைக்கு வரும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெலைய கேட்டா 'ஷாக்' அடிக்குது... 'மாற்று' வழியில் இறங்கிய மக்கள்... கோடிக்கணக்கில் நடந்த விற்பனை!
- மொத்த 'ஸ்டாக்'கும் தீந்து போச்சு... ஊரடங்கில் இந்தியர்கள் 'தேடித்தேடி' வாங்கிக்குவித்த பொருட்கள் இதுதான்!
- ‘சொல்லவே இல்ல?’.. ‘கொரோனாவ’ பத்தி நெனைச்சத.. அப்படியே தலைகீழாக ‘புரட்டிப் போடும் உலக சுகாதர அமைப்பின்’ அதிர்ச்சி ரிப்போர்ட்!
- 'எங்களால சுத்தமா முடியல!.. தயவு செஞ்சு நீங்களே வேலயவிட்டு போயிடுங்க'!.. 22,000 ஊழியர்களை ஒரே மாதத்தில் வெளியேற்றிய கொடுமை!
- எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டீங்களா?... தடியடி நடத்திய போலீசார்... சிதறி 'ஓடிய' பொதுமக்கள்!
- 'உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து'... 'இன்னும் 5 நாட்களில்'... 'அறிவிப்பு வெளியிட்டுள்ள நாடு!'...
- சென்னையில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு!.. தேனியில் 351 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... ஒரே நாளில் உச்சம் தொட்ட பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- கொரோனா தடுப்பு மருந்துக்கு விலை நிர்ணயம்!.. இந்தியாவில் தொடங்க இருக்கும் விற்பனை!.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
- 'நீண்டநாள் அமைதிக்குப் பிறகு'... 'அச்சத்தை கிளப்பியுள்ள நாடு!'... 'திடீரென கடுமையாகும் நடவடிக்கைகளால் வலுக்கும் சந்தேகம்'...