'இந்திய' அழகிக்கு 'கொரோனா'.. தள்ளிப் போன 'உலக' அழகி போட்டி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

2021 - ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி (Miss World), போர்டோ ரிக்கோவில் (Puerto Rico) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

'இந்திய' அழகிக்கு 'கொரோனா'.. தள்ளிப் போன 'உலக' அழகி போட்டி!!
Advertising
>
Advertising

இந்த போட்டியில், பங்கு கொள்ள வேண்டி, உலக நாடுகள் பலவற்றில் இருந்து அங்கு சென்றடைந்தனர். இந்தியா சார்பில், மானசா வாரணாசி (Manasa Varanasi) பங்கேற்றார். இந்நிலையில், நேற்று இரவு உலக அழகி இறுதி போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தள்ளி வைக்கப்படவுள்ளதாக அப்போட்டியின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Puerto rico Miss world beauty finals postponed

இதற்கு காரணம், போட்டியில் பங்கேற்றுள்ள அழகிகளில், இந்திய அழகியான மானசா உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தான். இது குறித்து, உலக அழகி போட்டி அமைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், '2021 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியின் பங்கேற்பாளர்களில், சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,. இதன் காரணமாக, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கலந்துரையாடலுக்கு பிறகு, உலக அழகியின் இறுதி போட்டியை ஒத்திவைக்க முடிவு எடுத்தோம். இந்த இறுதிப் போட்டி, அடுத்த 90 நாட்களுக்குள் திட்டமிடப்பட்டு, போர்டோ ரிக்கோவில் வைத்து நடத்தப்படும்' என  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அழகியான மானசாவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மிஸ் இந்தியா அமைப்பு, மானசா விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும், தற்போது அவரது பாதுகாப்பு மற்றும் உடல்நிலை தான் எங்களுக்கு முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி, 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய அழகி பட்டத்தை வென்று, உலக அழகி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். முன்னதாக, சமீபத்தில் இஸ்ரேலில் நடந்த உலக பிரபஞ்ச அழகி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து (Harnaaz Sandhu) பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

HARNAZ SANDHU, MISS WORLD, MANASA VARANASI, மானசா வாரணாசி, உலக அழகி போட்டி, கொரோனா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்