‘குரங்கு-பி வைரஸை தொடர்ந்து...’ அசுரத் தனமாக பரவ தொடங்கியுள்ள ‘நோரோ’ வைரஸ்...! எந்த நாட்டில் தெரியுமா...? - அறிகுறி எதுவுமே இல்லாம கூட வந்திடுமாம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித குலத்தை நடுங்க செய்து வருகிறது. கொரோனா வைரஸ் முதல் அலை முடிந்த பின்னர் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த அலைகள் உருவாகி வருகிறது.
மேலும் அதன் உப விளைவுகளாக, கருப்பு புஞ்சை, மஞ்சள் புஞ்சை ஆகிய நோய்களும் உருவாகி மனிதர்களை காவு வாங்கியது. இந்த நிலையில், அண்மையில் சீனாவில் குரங்கு பி வைரஸ் தொற்று பரவத் தொடங்கி அதில் ஒருவர் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியான தொற்றுக்களால் மனிதன் கலங்கி போயிருக்கும் நிலையில் மேலும் ஒரு இடியாக நோரோ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் தொற்று இங்கிலாந்தில் அசுரத் தனமாக பரவிவருவதாக அந்நாட்டு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நோரோவைரஸ் மிகவும் வேகமாகவும் தீவிரமாகவும் பரவும் தொற்றுக் கிருமி ஆகும். இது‘ஃபுட் பாய்சனிங்’ என்றும் பல நாடுகளில் அழைக்கப்படுகிறது.
இரைப்பையை நேரடியாக தாக்கும் இந்த நோரோ வைரஸ், 12 முதல் 48 மணி நேரத்தில் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் வலி, தலை வலி போன்றவை உருவாகும். மேலும் இதில் எந்த அறிகுறியும் இல்லாமல் கூட வைரஸ் தொற்று ஏற்படலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நோரோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் பேதி மற்றும் வாந்தியில் உள்ளது. தூய்மையில்லாத உணவு, அசுத்தமான நீர், ஆகியவற்றில் இருந்து இந்த வைரஸ் மற்றவர்களுக்கு சீக்கிரமாக தொற்றிக் கொள்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடலிலிருந்து ஏராளமான வைரஸ் நுண்துகள்கள் வெளியாகிறது. இதில், குறைந்தபட்ச அளவு இருந்தாலே ஒருவர் இந்த தொற்று நோய்க்கு உள்ளாகிவிட நேரிடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
வைரஸ் இருக்கும் உணவை தொடும் போது நம் கை விரல்களின் மூலம் வாய் வழியாக உள்ளே சென்று விடுகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் உணவு, பாத்திரங்கள், உடைமைகள் போன்றவற்றை உபயோகிக்கும் போது. மேலும் அசுத்தமான நீரை குடித்தாலும் எளிதாக நோரோ வைரஸ் தொற்றிக் கொள்ளும்.
இதனால் மேலும் ஒரு பிரச்சனை என்னவென்றால், வயதானவர்கள், சிறு குழந்தைகள் உள்ளிட்டோர் தங்கள் உடலில் நீரிழப்புக்கு ஆளாவர்கள். ஆகவே மருத்துவர்களை சந்தித்து முறையான சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆகஸ்ட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி'... 'பிரிட்டனில் இது நடக்கலாம்'... எச்சரித்த சுகாதார செயலாளர்!
- 'குளிர்காலம் வேற வருது...' 'அவங்களுக்கு' கண்டிப்பா 'பூஸ்டர் வாக்சின்' போட்டாகணும்...! - மூன்றாவது தடுப்பூசி போட தீவிரம் காட்டும் நாடு...!
- 'அந்த' ஒரு நாட்டுக்கு போறதுக்கு மட்டும்... எந்த தடுப்பூசினாலும் 'ஓகே' தான்...! - கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...!
- 72 வயசு முதியவருக்கு... 10 மாசத்துல... 43 முறை கொரோனா பாசிட்டிவ்!.. என்ன நடக்குதுனே புரியாம திகைத்து நிற்கும் மருத்துவர்கள்!
- ஜெட் வேகத்துல 'டெல்டா பிளஸ்' பரவிட்டு இருக்கு...! 'இந்த நேரத்துல ஊரடங்கை தளர்த்துறது பெரிய ஆபத்துல போய் முடியும்...' அதிரடி 'முடிவு' எடுத்த நாடு...!
- "அவரு கண்டிப்பா என்னைத் தேடி வருவாரு... பல ஆண்டுகள் காத்திருந்த 'காதலி'... இறுதியில் மகன் கண்டுபிடித்த 'உண்மை'... மனதை 'உருக' வைக்கும் சம்பவம்!!
- கொரோனா வைரஸா? அப்படின்னா என்ன...? '11 மாசம் கழிச்சு மகனிடம் ஏற்பட்ட மாற்றம்...' - அதிர்ந்துப்போன பெற்றோர்...!
- ‘மொதல்ல அந்த நம்பருக்கு டயல் பண்ணனும்’.. ‘அப்றம் பின்பக்கமா போனா ஒரு பொண்ணு வரும்’.. ‘உள்ளாடைக்குள் இருந்து எதையோ எடுத்து தரும் பெண்!’- அழகு நிலையத்தில் போலீஸார் கண்ட திடுக்கிடும் காட்சி!
- 'உயிர் நீத்தவர்களை அடக்கம் பண்ண முடியாமல்... 5 வாரங்கள் வீட்டிலேயே வைத்திருக்கும் அவலம்!' - கொரோனாவின் ‘பேயாட்டம்’.. கதிகலங்கி நிற்கும் நாடு!
- 'காது வலியின் உச்சத்தில் வந்த 3 வயது சிறுவன்!' - காதுக்குள் இருந்ததை பார்த்து ‘ஆடிப் போன மருத்துவர்கள்!’