'எப்ப பாரு குத்துடா,கொல்லுடாண்ணு இருக்கான்'...'கொந்தளித்த பெற்றோர்'...வந்தது அதிரடி தடை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பள்ளி மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை பலரும் அடிமையாக இருக்கும் கேம் தான் பப்ஜி.இந்த கேமை விளையாட இளைஞர்கள் பல மணி நேரம் செலவிடுகிறார்கள்.இதனால் அவர்களின் கவனம் சிதறுவதோடு,அவர்களின் உடல் நிலையம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

பப்ஜி கேம் பிரபல அடைந்த போதே அதனை தடை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து  குஜராத்தில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டது.தடையையும் மீறி,அங்கு பப்ஜி கேம் விளையாடியவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே பப்ஜி கேம் விளையாடுவதால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் முழுவதுமாக அழிந்து விடும் என பெற்றோர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்ததால்,நேபாள அரசு பப்ஜி கேம் விளையாட அதிரடி தடை விதித்துள்ளது.

தங்கள் நெட்வொர்க்கில் பப்ஜி விளையாட்டைத் தடை செய்ய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் நேபாள தொலைத்தொடர்பு நிறுவனம் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.அதில் நாட்டில் உள்ள நுகர்வோர்கள் விரும்புவதால் நேபாள் முழுவதும் உள்ள நெட்வொர்க்கில் பப்ஜி கேம் ஆன்லைனில் விளையாடுவதைத் தடை செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளது.

இதுக் குறித்து பேசிய நேபாள தொலைத்தொடர்புத் துறை அதிகாரி ''இளைஞர்களை பெருமளவிற்கு அடிமையாக்கியிருக்கும்  பப்ஜி கேம்  மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.நமது நாட்டு இளைஞர்களின் உடல் மற்றும் மன திறன் தான் மிகவும் முக்கியமான ஒன்று.அதற்கு ஆபத்தை விளைவிக்கும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

மேலும் அனைத்து இணையதள சேவை நிறுவனங்களுக்கும் அதன் ஸ்ட்ரீமிங்கை தடை செய்ய வேண்டும் என அறிக்கை விடுத்தோம். அதை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதுடன் நேற்று முதல் தடை அமலுக்கு வந்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.

PUBG, NEPAL, PARENTS COMPLAINED, PUBG GAME BANNED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்