"கட்டிப்புடி வைத்தியம்.." 7,000 ரூபாய் வரை கட்டணம்.. இளைஞரின் தொழில்.. மெய்சிலிர்க்க வைக்கும் காரணம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்றைய காலகட்டத்தில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத சில விஷயங்களை தொழிலாகவும் மாற்றி, அதன் மூலம் பணம் சம்பாதிப்பதை பலரும் செய்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "இறந்த உடலை தோண்டி எடுத்ததுக்கு அப்புறம்.." மழை வர வைக்க வினோத சடங்கு.. பரபரப்பை உண்டு பண்ணும் கிராம மக்கள்

அந்த வகையில், ஒருவரைக் கட்டி அணைப்பதன் மூலம், பணம் சம்பாதித்து வருவதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கமல்ஹாசன் நடித்திருந்த "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்" என்னும் திரைப்படத்தில் கட்டிப்புடி வைத்தியம் பற்றி கமல் பேசுவதை நாம் கேட்டிருப்போம். அந்த படத்தில், பிரச்சனையுடன் இருக்கும் சிலரை கமலஹாசன் கட்டிப்பிடித்து தேற்றுவார். நிஜத்திலும் ஒருவரை கட்டி அணைத்துக் கொள்வதால் அவர்களின் மன அழுத்தம் குறைந்து சற்று ஆக்டிவாக செயல்படுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

அப்படி ஒருவரைக் கட்டி அணைப்பதையே, ஒருவர் தனக்கான தொழிலாக மாற்றி உள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் கனடாவைச் சேர்ந்த நபர் Trevor Hooton. 30 வயதாகும் இந்த இளைஞர், Cuddling என்பதையே ஒரு தொழில் முறையாக கொண்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் ஒருவரை கட்டியணைத்துக் கொள்வதற்கு, 75 பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7500 ரூபாய் வரை கட்டணம் ஆகவும் அவர் வசூலித்து வருகிறார். இத்துடன் உறவு சிக்கல்களை தீர்க்கவும், பலமான உறவை வளர்த்துக் கொள்ளவும் நிறைய சேவைகளையும் அவர் வழங்கி வருகிறார்.

இது குறித்து பேசும் Trevor, "கட்டியணைப்பது என்பதைத் தாண்டி ஒருவரை தொடுதல் மூலம் அவருக்கு அன்பு, பாசம் மற்றும் அக்கறையும் கொடுக்க முடியும். இந்த சேவையை எல்லோராலும் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாது. சிலர், நேரடியாகவே என்னிடம் நீங்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறி இருக்கிறார்கள். மனித உறவுகளை உருவாக்க வேண்டும் என்ற ஆரோக்கியத்தின் அடிப்படையில் தான் இதனை ஒரு தொழிலாகவே நான் ஒரு மாற்றிக் கொண்டேன்.

பலரும் இந்த மனித உறவுகளை உருவாக்க தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், இந்த சேவையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என நான் விரும்பினேன். ஆரம்பத்தில் பலரும் இதனைச் சற்று அருவருப்புடன் தான் எதிர் கொண்டார்கள். ஆனால், நேரம் செல்ல செல்ல இது அவர்களுக்கு சற்று சாதாரணமாகவே தெரிந்தது" என கூறியுள்ளார்.

ஒருவருக்கு எந்த வேலையும் செய்யாமல், சுமார் ஒரு மணி நேரம்  இருக்கும் போது, அன்பும், ஆதரவும், அரவணைப்பும் கிடைக்க வேண்டும் என எண்ணினால் அவர்கள் எப்படி உணர்வார்கள். இந்த கேள்வியை தான் முதலில் Trevor எழுப்பி உள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, அறிவியல் மூலம் இது தொடர்பாக அவர் ஆலோசித்து வந்தாலும், கடந்த மே மாதம் தான், ஒரு தொழிலாக அவரால் தொடங்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "53 வருசத்துக்கு முன்னாடி தொலைஞ்சது'ங்க.." ஏரி நீரில் கிடந்த பொருள்.. "இத்தனை மைல் தாண்டி வரணும்னு விதி இருந்துருக்கு.."

PROFESSIONAL CUDDLER, HUGGING, PROFESSIONAL CUDDLER CHARGES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்