மனித கால் தடமே படாத தீவை வாங்கிய 2 பேர்.. அதுக்கப்பறம் அவங்க செஞ்சது தான் ஹைலைட்டே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த இருவர் பொது மக்களிடம் பணத்தைத் திரட்டி தீவு ஒன்றினை வாங்கியுள்ளனர். இப்போது அதனை தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கி உள்ளனர். இதுதான் இப்பொது சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக்.

Advertising
>
Advertising

தீவு

மத்திய அமெரிக்க நாடான பெலிஸ்-க்கு அருகில் அமைந்துள்ள தீவு ஒன்றினை கரேத் ஜான்சன் மற்றும் மார்ஷல் மேயே ஆகிய இருவரும் வாங்கி உள்ளனர். ஆனால், இவர்கள் தங்களது சொந்த பணத்தினை கொண்டு இந்த தீவை வாங்கவில்லை. தொழில் முனைவோரான ஜான்சன் மற்றும் உலகளாவிய நிதி மற்றும் வர்த்தக நிபுணரான மார்ஷல் ஆகிய இருவரும் “Let’s Buy an Island” என்னும் கிரவுட் ஃபண்டிங் திட்டத்தை துவங்கினர்.

இந்த திட்டத்திற்கு நன்கொடை அளிப்பவர்கள் விரைவில் மலர இருக்கும் இந்த நாட்டின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என இருவரும் அறிவித்துள்ளனர். தீவு வாங்கும் திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே இருவரும் நிறைவேற்றி விட்டனர். 1.2 ஏக்கர் சுற்றளவு கொண்ட இந்த தீவை வாங்க 250,000 அமெரிக்க டாலர்கள் செலவழித்ததாக இருவரும் தெரிவித்து உள்ளனர்.

முதலீடு

இந்த தீவை புதிய நாடாக அறிவிக்கும் பணியில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நாட்டிற்கு  "Principality of Islandia” எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு இந்நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,250 டாலர்கள் முதலீடு செய்பவர்கள் தேச கட்டுமான பணியில் முக்கிய பணியாற்றுவர் எனக் குறிப்பிடும் இவர்கள்," முதலீட்டாளர்கள் வழிகாட்டுதலின் படி இந்த நாட்டிற்கான மந்திரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்கின்றனர்.

குடிமக்கள்

சேஸ் கட்டுமான திட்டத்திற்கு சிறிய நிதி உதவி அளிப்பவர்களுக்கு இந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்பட இருக்கிறதாம். மொத்தமாக 5000 குடிமக்களை அமர்த்த இந்த இருவரும் பிளான் செய்திருக்கின்றனர்.

"சமூகப் பொறுப்பு, சுற்றுச்சூழல் உடன் இணைந்த வாழ்வு, தீவின் நிலையான வளத்தினை கொண்டு தன்னிறைவு அடைதல், இயற்கையின் தனிமையை பயணிகள் அனுபவிக்க வழிகளை மேற்கொள்ளுதல்" ஆகியவை இந்த நாட்டின் கடமைகள் என “Let’s Buy an Island” இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பொது மக்களிடம் பணம் திரட்டி, தனி நாட்டையே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இருவரும் இந்த நெடிய பயணத்தில் வெற்றி பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PRINCIPALITYOFISLANDIA, AMERICA, CROWDFUNDING, தீவு, அமெரிக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்