யப்பா சாமி, உங்க 'பணத்த' நீங்களே வச்சுக்கோங்க...! 'எனக்கு அவன் கெடச்சா போதும்...' - 'காதலனை' கரம்பிடிக்க 'ஒத்தக்காலில்' நின்ன இளவரசி...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானின் தற்போதைய பட்டத்து இளவரசரான புமிஹிடோவின் மகள் இளவரசி மகோ. இவர் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வருகிறார்.

தற்போது 29 வயதாகும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கொமுரோவும் 2012-ல் டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக சந்தித்துக் கொண்டனர். அந்த அறிமுகம் கடந்த 2017-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமற்ற முறையில் திருமண நிச்சயம் செய்துகொண்டனர்.

2018-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்த நிலையில், கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்ததில் அவர்களின் திருமணம் தள்ளி சென்றது.

இளவரசி மகோ சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்யவுள்ளதால் ஜப்பான் அரசு குடும்ப விதிப்படி இளவரசி என்ற பட்டத்தை இழந்து விடுவார். அரச குடும்பத்தை சேர்ந்த பெண் என்றால் அவர்களுக்கு இழப்பிடு உண்டு. அதன்படி இளவரசி மகோவிற்கு இந்திய மதிப்பில் ரூ. 8.76 கோடி இழப்பீடாக கிடைக்கும். ஆனால், இளவரசி மகோவோ மக்கள் வரிப்பணத்தில் வரும் இந்த இழப்பீடு, தனக்கு தேவையில்லை என மறுத்துவிட்டார்.

இளவரசியின் காதலர் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இளவரசி மகோவும் அமெரிக்காவிலேயே தங்க முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்