"அது அவங்க தானான்னு சந்தேகம் வந்துச்சு.. ஆனா".. உலகமே ஸ்தம்பிச்சப்போன இளவரசி டயானாவின் இறுதிக்கணம்.. மீட்புப்படை வீரர் சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து இளவரசியாக இருந்த டயானா விபத்தில் சிக்கிய தருணம் குறித்து மீட்புப்படை வீரர் ஒருவர் மனம் திறந்திருக்கிறார்.
பெரும் சோகம்
அது 1997 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதி. உலகமே அன்றைய தினம் டயானா பற்றித்தான் பேசியது. பாரீஸுக்கு சென்றிருந்த டயானாவின் கார் மோசமான விபத்தை சந்தித்தது. கடுமையான காயங்களுடன் டயானா மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே அந்த துயரச் செய்தி வெளிவந்தது. உலகமே ஸ்தம்பித்துப்போன தருணம் அது.
1961 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வசதியான குடும்பத்தில் பிறந்தவர் டயானா. இயர்ல் ஸ்பென்சர் குடும்பம் என்றால் இங்கிலாந்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு புகழடைந்த டயானாவின் குடும்பத்தினர் அரச குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகிவந்தனர். அதுவே பின்னாளில் இளவரசர் சார்லஸ் - டயானா காதலுக்கும் காரணமாக அமைந்தது. சிறுவயது முதலே நண்பர்களாக இருந்துவந்த இருவரும் காதலித்த நிலையில் 1981 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி இருவர்க்கும் திருமணம் நடைபெற்றது. வரலாற்றில் நடந்த மிகப்பெரிய திருமணங்களில் சார்லஸ் - டயானா திருமணமும் ஒன்று.
மீட்பு
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், 1996 ஆம் ஆண்டு சார்லஸ் - டயானா தம்பதி பிரிந்தனர். அடுத்த ஆண்டே நேர்ந்த மோசமான விபத்தில் டயானா மரணமடைந்தார். விபத்து நேர்ந்த உடனேயே உள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குழுவில் சேவியர் கார்மெலான் என்பவரும் இருந்தார்.
என்ன நடந்தது?
இந்த துயர சம்பவம் நடந்து சுமார் 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தற்போது சேவியர் அந்த நாளினை நினைவுகூர்ந்திருக்கிறார். இதுபற்றி பேசிய அவர்,"நான் அவரை காரில் இருந்து வெளியே கொண்டுவந்தேன். அது டயானா தானா என சந்தேகம் எழுந்தது. ஆனால் ,அவரது தலைமுடியை வைத்து அவரை அடையாளம் கண்டுகொண்டேன். அவரது கையை பிடித்து காரில் இருந்து வெளியே கொண்டுவர முயற்சித்தேன். அப்போது, 'கடவுளே.. என்ன நடந்தது?' என்றார் அவர். நான் அமைதியாக இருங்கள் என்று கூறினேன். அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் பிழைத்துக்கொள்வார் என நினைத்தேன். ஆனால், அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அது ஒரு மோசமான நாள்" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அண்மையில் கொரோனாவால் மறைந்த பிரான்ஸ் Ex ஜனாதிபதிக்கும், பிரிட்டன் இளவரசி டயானாவுக்கும் இடையில் நடந்தது என்ன?’.. அந்த 'ரொமான்ஸ் நாவல்' பற்றி அவரே கூறியிருந்த ‘சுவாரஸ்ய’ தகவல்!
- விவாகரத்துக்கே காரணமான ‘இளவரசி’ டயானாவின் விவகாரமான பேட்டி?.. வெளியான அதிரடி உத்தரவு!.. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒன்றுசேர்ந்த 'வில்லியம் மற்றும் ஹாரி!'