ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பூக்களுக்கு நடுவே இருந்த விஷயம்.. பாத்ததும் திகைத்து போன இளவரசர் வில்லியம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், ராஜ மரியாதையுடன் கடந்த 19 ஆம் தேதியன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.

Advertising
>
Advertising

Also Read | 2600 வருஷத்துக்கு முன்னாடியே இதெல்லாம் சாப்பிட்ருக்காங்களா.? பாலைவனத்துல சிக்கிய மர்ம பானை.. அதிர வைக்கும் தகவல்கள்..!

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசு மரியாதை படி ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.

விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் சவப்பெட்டி மீது வைத்தார்.

இந்நிலையில் இளவரசர் வில்லியம் இறுதிச் சடங்கின் போது தன்னை நெகிழ வைத்த தருணங்களை பகிர்ந்து கொண்டார். ராணி எலிசபெத் கடந்த 8 ஆம் தேதி இறந்த பிறகு ஸ்காட்லாந்தில் பால்மோரலுக்கு மேலே ஐந்து நிறத்தில் வானவில் தோன்றியதை குடும்பத்தினர் பார்த்ததாக குறிப்பிட்ட இளவரசர் வில்லியம், அசாதாரண காட்சி தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக குறிப்பிட்டார்.

அது மட்டுமில்லாமல், முடிந்தவரை ராணிக்காக வைக்கப்பட்டிருந்த இரங்கல் செய்தி குறிப்புகளை படித்ததாகவும், அவற்றில் சில கட்டுரைகள் போல இருந்ததாகவும் அதிலும் குழந்தைகள் வைத்த செய்திக் குறிப்புகள் மனதை நெகிழ வைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மறைந்த ராணிக்காக வைக்கப்பட்டிருந்த மலர் கொத்துகளுக்கு இடையே இருந்த ஒரு பொருளைக் கண்டு அப்படியே ஒரு நிமிடம் திகைத்து போயுள்ளார் இளவரசர் வில்லியம். அந்த பூக்களுக்கு மத்தியில், ராணிக்கு மிகவும் பிடித்தமான பேடிங்டன் கரடி பொம்மைகள் இருந்துள்ளது. அவற்றை கண்டதும் கண்ணீரை அடக்க முடியாத அளவுக்கு தான் தவித்ததாகவும், தனது அமைதியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறியதாகவும் இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | எப்போதும் handbag உடன் பயணித்த இங்கிலாந்து ராணி.. அழகுக்கு மட்டும் இல்ல.. அதுல இப்படி ஒரு குறியீடும் இருந்திருக்கு..!

QUEEN ELIZABETH, PRINCE WILLIAM, DOLL, QUEEN ELIZABETH FUNERAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்