'என்னோட மக்கள் தான் முக்கியம்'... 'ட்ரம்ப் கொளுத்திய முதல் சரவெடி'... 'என்ன நடக்கும்'... பல கேள்விகளோடு இந்தியர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டுகள் வழங்குவதை அடுத்த 60 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்தியர்கள் மனதில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் ட்ரம்ப் தற்போது சில அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமான ஒன்று தான் கிரீன் கார்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவு. இதன் மூலம் அமெரிக்காவுக்குள் இப்போதைக்கு குடியேற வருபவர்களை தடுக்கும் விதத்தில் அது உதவும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தசூழ்நிலையில் ட்ரம்ப் போட்டிருக்கும் இந்த உத்தரவு, கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய-அமெரிக்கர்களை நிச்சயமாக பாதிக்கும் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இதன் மூலம் நிரந்தரக் குடியுரிமை கோருபவர்களுக்கான நடைமுறைகள் மேலும் தாமதமடையும் என கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ட்ரம்ப், ''முதலில் அமெரிக்க மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம். இந்த தடையானது 60 நாட்களுக்கு இருக்கும். அதன் பிறகு பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, அந்த தடையில் மாற்றமோ அல்லது நீட்டிப்போ செய்யப்படும்'' என கூறியுள்ளார்.
இதற்கிடையே ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிபர் ட்ரம்ப் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை இந்தியர்ககளுக்கு எந்த விதத்தில் பாதகமாக அமையும் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என வல்லுநர்கள் பலரும் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொத்துக் கொத்தாக போன உயிர்கள்'... 'வீதியில் நின்று கதறிய மக்கள்'... '45 ஆயிரத்தை கடந்த பலி'... வல்லரசு அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
- 'இறப்பதற்கு' முன் 'வீடியோ காலில்' பேசிய 'டாக்டர்!'.. "அவரோட கடைசி ஆசை இதான்.. நிறைவேத்துங்க முதல்வர் அய்யா!" - கதறி அழும் சைமனின் மனைவி!!
- 'புரட்டி' போட்டுள்ள கொரோனாவிலிருந்து 'மெல்ல' எழும் 'நகரம்'... அடுத்தகட்ட அவசர 'நடவடிக்கை' இதுதான்... வெளியாகியுள்ள 'தகவல்'...
- 'அறிகுறிகள்' எதுவுமின்றி '19வது முறையும்' பெண்ணுக்கு பாசிட்டிவ்... '42 நாட்கள்' சிகிச்சைக்குப் பின்... 'கவலையில்' மருத்துவ குழு...
- 'நாடாளுமன்றத்தில்' ஒருவருக்கு 'கொரோனா'!.. குடும்பத்தினர் உட்பட 'தனிமைப்படுத்தப் பட்ட 11 பேர்!'
- 'சீன' மருத்துவரால்... வடகொரிய அதிபருக்கு 'கொரோனா' பரவியதா?... விலகாத மர்மம்!
- இந்த ரணகளத்திலும் 'கிளுகிளுப்பாக' போட்டி நடத்திய 'சீனா'... '48 மணி' நேரத்தில் '10 மில்லியன்' பார்வையாளர்களை பெற்ற 'வீடியோ...'
- ‘மோசமான நிலையில் இருக்கும் நாடுகள்’... ‘இருமடங்கு உயரும் அபாயம்’... 'ஐ.நா எச்சரிக்கை'!
- 'பொருளாதாரம் சரிவு...' 'தொழில் பாதிப்பு...' 'சுற்றுலா முடக்கம்...' 'வேலையிழப்பு...' "கொரோனாவின் அடுத்த அடிக்கு தயாராகுங்கள்..." 'எச்சரிக்கும் சீனா...'
- 'கொரோனா' பாதிப்பிலிருந்து ஒருவர் குணமாக 'எத்தனை' நாட்களாகும்?... 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன?'...