'மார்ஃபிங் வீடியோ வழியாக உத்வேகம்...' "என்ன பிரசிடென்ட் இது?..." 'ட்ரோல்' செய்யும் 'அமெரிக்கர்கள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் அமெரிக்கா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹாலிவுட் படக் காட்சி ஒன்றில் தன்னுடைய முகத்தை வைத்து மார்ஃபிங் செய்து ட்ரம்ப் பதிவிட்டிருக்கும் காட்சியை நெட்டிசன்கள் கடுமையாக டிரோல் செய்து வருகின்றனர்.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்கா மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 15,00,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90,000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டி விடும் எனக் கூறப்படுகிறது. கொரோனா விவகாரத்தில் ட்ரம்ப் பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
இந்தநிலையில், ஹாலிவுட்படமான இன்டிபென்டென்ஸ் டே படத்தில் வரும் அமெரிக்க அதிபர் கதாபாத்திரம் பேசுவது போன்று மார்பிங் செய்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த படத்தில் நடித்திருக்கும் பில் புல்மேன், உலகத்தின் மீது ஏலியன்கள் தாக்குதல் நடைபெறும்போது ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசுவார். அந்தக்காட்சிகளுக்கு அமெரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தன.
இந்தக் காட்சியில் பில் புல்மேனின் முகத்தில் தன்னுடைய முகம் இருப்பதுபோன்றும், தான் ராணுவ வீரர்கள் முன்னால் நின்று பேசுவது போலவும் எடிட் செய்யப்பட்ட வீடியோவை ட்ரம்ப் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனாவால் அமெரிக்கா மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், அதிபர் ட்ரம்பின் இதுபோன்ற செயல்கள் தேவையற்றது எனக் கூறி ட்ரம்பை நெட்டிசன்கள் கடுமையாக டிரோல் செய்துவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா 'விவகாரம்'... "என்னால இப்போ பேச முடியாதுப்பா"... என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாப்போம்!
- "நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க பாக்குறீங்களா!?".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா!.. என்ன நடந்தது?
- "ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் இப்படி உயர்ந்திருக்கும்!" - அதிர வைத்த ஆய்வு ரிப்போர்ட்!
- 'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'
- 'அடுத்த' வாரம் உங்களுக்கு இருக்கு... அவங்க கூட 'கூட்டணியோ'?... 'உலக சுகாதார அமைப்புக்கு' எதிராக... கொந்தளிக்கும் 'டிரம்ப்'!
- 'சீனாவுக்கு' எதிராக '18 அம்சத் திட்டம்...' 'அமெரிக்காவுடன்' கை கோர்க்கும் 'இந்தியா...' 'இந்தியாவுக்கு' அடிக்கப் போகும் 'ஜாக்பாட்...'
- "இடைவெளி விட்டு உக்கார சொன்னா எங்க சார் கேக்குறாங்க..." "அதான் இப்படி ஒரு ஏற்பாடு..." 'உணவகத்தின் அழகிய யோசனை...'
- 'சீனாவுக்கு' எப்படி 'அமெரிக்கா' பதிலடி 'கொடுக்கும்...' 'கேள்விக்கு' அதிரடி பதிலளித்த 'ட்ரம்ப்...' 'சீன நிறுவனங்களுக்கு விரைவில் செக்...'
- 'இதெல்லாம் சரிப்பட்டு வராது...' 'பொருளாதாரத்தடையை' விதிச்சாத்தான் 'சரிப்படும்...' 'அமெரிக்க' செனட் சபையில் நடைபெற்ற 'தரமான சம்பவம்...'
- 'கைநிறைய சம்பளம், அமெரிக்கால வேலைன்னு ஆசையா வந்தோம்'... 'பறிபோன வேலை'... 'இந்தியாவுக்கு வர முடியாமல் தவிப்பு'... அதிர்ச்சி பின்னணி!