பசியுடன் இருந்த கர்ப்பிணி பெண்.. "ஆசையா Sandwich ஆர்டர் பண்ணி, பார்சல தொறந்து பாத்தா" உள்ளே காத்திருந்த 'அதிர்ச்சி'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கர்ப்பிணி பெண் ஒருவர், உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்த சாண்ட்விச்சை எடுத்து பார்த்த போது, அதற்குள் இருந்த பொருள் ஒன்றின் மூலம் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

Advertising
>
Advertising

இங்கிலாந்தின் Suffolk என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நெரிஸ் மொய்ஸ். இளம் பெண்ணான இவர், தற்போது கர்ப்பிணி ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு அதிக பசி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெரிய அளவிலான சாண்ட்விச் ஒன்றை அவரது கணவர் ஆர்டர் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, வீட்டுக்கு வந்த பார்சலை அவர்கள் திறந்து பார்த்த போது, கடும் அதிர்ச்சி ஒன்று நெரிஸ் மற்றும் அவரது கணவருக்கு காத்திருந்துள்ளது. இதற்கு காரணம், சாண்ட்விச் அடியில், காய்கறி வெட்ட பயன்படும் பெரிய கத்தி ஒன்று இருந்தது தான். இதனைக் கண்டு அவர்கள் இருவரும் அதிர்ந்து போகவே, இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது பேஸ்புக் பக்கத்தில், நெரிஸ் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சாண்ட்விச் அடியில் கத்தி இருப்பதை நெரிஸ் காட்டுகிறார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பேசி இருந்த நெரிஸ், "பார்சலை திறந்து பார்த்ததும் அப்படியே ஒரு நிமிடம் நாங்கள் உறைந்து போய் விட்டோம். எனது பார்ட்னரும் உணவகத்திற்கு அழைத்து, உங்களின் மஞ்சள் நிற கத்தி ஒன்று தொலைந்து போனதா என கேட்டார்.

ஒரு வேளை இந்த கத்தி இருக்கும் பார்சல், சிறு குழந்தை அல்லது டீனேஜர்கள் கைக்கு போயிருந்தால், என்ன ஆகி இருக்கும். என்னிடம் கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி தான்" என தெரிவித்துள்ளார். நெரிஸ் பகிர்ந்த வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் பதற்றம் அடைய செய்த நிலையில், பிரபல உணவகத்தின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றுள்ளது.

சாண்ட்விச் உள்ளே வாடிக்கையாளர்களுக்கு கத்தி வைக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்றும், இப்படி நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கத்தி வைத்து அனுப்பிய கடையில், கவனக் குறைவாக இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

SANDWICH, ONLINE ORDER, FOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்