வீட்டில் 'பிணமாக' கிடந்த 5 மாத கர்ப்பிணி... ஆற்றில் 'மிதந்த' கணவர் சடலம்... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவிலுள்ள ஜெர்சி நகரில் வசித்து வந்தவர் கரிமா கோத்தாரி. இவரது கணவர் மன்மோகன் மால். இந்தியாவை சேர்ந்த இந்த தம்பதியினர் ஜெர்சி சிட்டியில் 'நுக்கட்' என்ற இந்திய உணவகத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கரிமா கோத்தாரி கடந்த 26 ஆம் தேதியன்று தனது குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவரது மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜெர்சி நகர போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கர்ப்பிணியாக இருந்ததும், உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்ததும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மேலும் அதிர்ச்சியாக, கரிமாவின் கணவர் மன்மோகன் மாலும் ஹட்சன் ஆற்றில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. மன்மோகனின் உடலை கைப்பற்றிய போலீசார், அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடல் குறித்த அறிக்கை இன்னும் வெளிவரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். கணவர் மற்றும் கர்ப்பிணி மனைவி ஆகியோரின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய தம்பதிகள் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக... இந்தியாவுக்கு நிதியுதவி!.. அமெரிக்கா அறிவிப்பு!
- இரண்டு 'பெரிய' வண்டிகள் முழுதும் 'அழுகிய' உடல்கள்... 'ஆடிப்போய்' நிற்கும் நாடு!
- 'கொரோனா விஷயத்தில்’... ‘எங்களை தவறாக வழிநடத்துகிறது’... 'திரும்பவும் கொந்தளித்த ட்ரம்ப்’!
- ''அந்த ஒருமுறைதான் சச்சின் அழுதார்...'' ''தனியறையில் யாருக்கும் தெரியாமல்...'' 'நினைவுகூர்ந்த கங்குலி...'
- 'தகவல்களைப் பகிர்ந்தால் தான் வழி கிடைக்கும்...' 'கொரோனாவின் ஆரம்பப் புள்ளியை கண்டறிய வேண்டும்...' 'சீனாவிற்கு எதிராகத் திரளும் பாதிக்கப்பட்ட நாடுகள்...!'
- ‘இந்தியர்கள் உள்பட 2 லட்சம் பேர்’... ‘அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை’... ‘கலங்கி நிற்கும் மக்கள்’!
- 'மத்த' நாடுகளை விட... நாங்க இத 'அதிகமாவே' செய்றோம்... அதனால தான் எங்களுக்கு 'பாதிப்பு' அதிகம்!
- ‘இந்தியாவில் ஒரே நாளில்’... ‘அதிகபட்சமாக உயர்ந்த பலி எண்ணிக்கை’... ‘31 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு’!
- 'அது' உண்மையில் 'UFO' தானா?.. பரபரப்பு 'வீடியோ' சர்ச்சைக்கு 'அமெரிக்க' கடற்படையின் 'ஆச்சர்ய' பதில்!'
- 'கிம் எங்கிருக்கிறார் என்பது...' 'எங்களுக்கு மட்டுமே தெரியும்...' 'தென்கொரிய நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த முக்கியத் தகவல்...'