பிரசவம் அந்த நாட்டுல தான் நடக்கணும்.. பக்கத்து நாட்டுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்.. மலைக்க வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரசவத்திற்காக ரஷ்யாவில் இருந்து தங்களது நாட்டுக்கு வரும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அர்ஜென்டினா அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கான காரணம் தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | தென்காசி பெண் கிருத்திகா கொடுத்த வாக்குமூலம்.. நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு உத்தரவு..!
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஏற்றபடி குடியுரிமையை வழங்குகின்றன. அதாவது பாதுகாப்பு விஷயங்களை கருத்தில்கொண்டு இந்த முடிவுகளில் அவ்வப்போது பல நாடுகள் மாற்றங்களையும் கொண்டு வருகின்றன. அந்த வகையில் அர்ஜென்டினாவின் குடியுரிமை விதிமுறைகளின் அடிப்படையில் அந்த நாட்டில் யாரேனும் குழந்தைகளை பெற்றுக்கொண்டால், அந்த குழந்தைக்கு அர்ஜென்டினாவில் குடியுரிமை வழங்கப்படும். பல ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகின்றது.
ஆனால், இது சமீப நாடுகளில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதாவது சுற்றுலா விசாவில் அர்ஜென்டினாவிற்கு வரும் ரஷ்யாவை சேர்ந்த கர்ப்பிணிகள் அங்கேயே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர். இதன்மூலம் குழந்தைக்கு அர்ஜென்டினா குடியுரிமை கிடைக்கும். மேலும், பெற்றோராக தங்களுக்கும் குடியுரிமை எளிதில் பெறலாம் என பலர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக அர்ஜென்டினா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து பேசியுள்ள குடியுரிமை முகமைத் தலைவர் புளோரன்சியா கரிக்னானோ,"கடந்த வாரம் ரஷ்யாவில் இருந்து அர்ஜென்டினாவிற்குள் நுழைய 33 பெண்கள் முயற்சித்தனர். அவர்களை விசாரித்தபோது சுற்றுலாவுக்காக வந்திருப்பதாக முதலில் கூறினர். ஆனால், அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அதில் சிலர் அர்ஜென்டினா குடியுரிமையை பெறும் நோக்கில் இங்கே குழந்தையை பிரசவிக்க வந்திருப்பதை ஒப்புக்கொண்டனர். ஆனால், அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றும், அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. சமீப காலங்களில் இப்படி ரஷ்யாவில் இருந்து அர்ஜென்டினா வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், கடந்த மூன்று மாதங்களில் 5,819 ரஷ்யாவை சேர்ந்த கர்ப்பிணிகள் இப்படி அர்ஜென்டினாவிற்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர் விசா எடுக்காமலேயே 171 நாடுகளுக்கு பயணிக்க முடியும். அதுவே, ரஷ்ய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் 87 நாடுகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும். ரஷ்ய கர்ப்பிணிகளின் இந்த தேர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், உக்ரைன் விவகாரம் காரணமாக அர்ஜென்டினா செல்லும் ரஷ்ய கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read | மேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை.. மணப்பெண் எடுத்த முடிவு.. சோகத்தில் முடிந்த கல்யாணம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர்".. சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா கோல் கீப்பருக்கு கிடைத்த பெயர்.. சர்ச்சை பின்னணி!!
- மெஸ்ஸிக்காக கண் கலங்கிய கேரள சிறுவன்.. வேதனையுடன் அப்பவே கணிச்ச சூப்பர் விஷயம்.. கொண்டாடும் கால்பந்து ரசிகர்கள்
- அர்ஜென்டினா கப் ஜெயிச்ச இரவில்.. ஸ்தம்பிச்சு போன இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்.. வரலாறு படைத்த மெஸ்ஸியின் பதிவு!!
- "இவரு என்னப்பா இங்க?".. அர்ஜென்டினா ஜெயிச்ச கப்புடன் மைதானத்தில் வலம் வந்த Salt Bae!!.. இணையத்தை ஆக்கிரமித்த சம்பவம்!!
- "அட, கமலோட விக்ரம் படத்துக்கும், அர்ஜென்டினா Cup ஜெயிச்சதுக்கும் இப்டி ஒரு ஒற்றுமை இருக்கா?".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!
- FIFA World Cup: தேம்பி தேம்பி அழுத மெஸ்ஸி மனைவி.. தேற்றிய மெஸ்ஸி! என்ன ஒரு மொமண்ட்..
- 3-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது அர்ஜென்டினா.. உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! FIFA2022
- 10 வருசத்துக்கு முன்னாடி மெஸ்ஸி கூட ஃபோட்டோ.. இன்னைக்கி அவரு கூடயே உலக கோப்பையில் கோல்.. திரும்பி பாக்க வெச்ச இளம் வீரர்!!
- FIFA WORLD CUP 2022 : அர்ஜென்டினா தோத்ததுக்கு கலங்கிய கேரள சிறுவன்.. கனவை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராவல் ஏஜென்சி..
- போராடி தோற்ற பிரேசில்.. நெதர்லாந்துக்கு செக் வைத்த அர்ஜென்டினா.. காலிறுதி போட்டிகள் முடிவில் முன்னேறிய அணிகள் யார்?