'ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாங்க'!.. தாலிபான்கள் செய்த காரியத்தால்... அச்சத்தில் ஆப்கானிய பெண்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியால் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமா என்ற விவாதம் நடந்து வரும் சூழலில், சமீபத்தில் அவர்கள் செய்த சம்பவம் ஒன்று அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களின் ஆட்சி கொடுமையானதாக இருக்குமென எண்ணி, ஆப்கானிய மக்கள் பிற நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக அகதிகளாக செல்கின்றனர்.

1996ம் ஆண்டு தாலிபான்களின் முதல் ஆட்சியில் பெண் சுதந்திரத்தை சிதைக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் முன்பு இழந்ததும் ஏராளமானப் பெண்கள் படித்து பட்டதாரிகளாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் முன்னேறினர்.

எனினும், இந்த முறை பெண்களின் உரிமைகள் பாதுக்காக்கப்படும் எனத் தற்போது தாலிபான் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ள நிலையில், விளம்பரங்களில் இடம் பெற்றிருந்த பெண் ஓவியங்களை தாலிபான்கள் அழிக்கும் காட்சி பெண்கள் மனதில் அச்சத்தை விதைத்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்