'ஷிஃப்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் மெசேஜ், போன் எல்லாம் பண்ணக்கூடாது'- டீம் லீடர்களுக்கு கண்டிஷன் போட்ட ‘நாடு'..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அலுவலகங்களில் வேலை பார்த்து முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய பின்னர் டீம் லீடர்களிடம் இருந்து வரும் போன் கால்களுக்கும் மெசேஞ்களுக்கும் பலரும் பதில் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இதுபோல், ஒரு பணியாளர் தன்னுடைய ஷிஃப்ட் நேரம் முடிந்து வீட்டுக்குக் கிளம்பிவிட்டால் அவரை எந்த வகையிலும் தொந்தரவே செய்யக் கூடாது என கட்டளை பிறப்பித்துள்ளது போர்ச்சுகல் நாடு.

Advertising
>
Advertising

ஷிஃப்ட் நேரம் முடிந்த பணியாளர்களை எந்த விதத்திலும் மேனேஜர்களோ, டீம் லீடர்களோ இன்ன பிற உயர் பதவிகளில் இருப்பவர்களே தொந்தரவு செய்யக் கூடாது என போர்ச்சுகல் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அது போல் தொந்தரவு செய்வது இனி வரும் காலங்களில் சட்டவிரோதம் ஆகக் கருதப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒரு சட்டத்தையும் அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதே போன்ற ஒரு சட்டம் கடந்த 2017-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலும் வகுக்கப்பட்டது. “பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதித்து நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். மீறினால் அது குற்றமாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும்” என பிரான்ஸ் நாட்டில் விதிக்கப்பட்ட உத்தரவால் பணியாளர்கள் தங்களது வேலை நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அலுவலக போன் அழைப்புகள், மெயில்கள், மெசேஞ்கள் என எதற்கும் பதில் அளிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டிலும் தற்போது இப்புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் அலுவலகங்ளில் பணி செய்வோருக்கு மட்டுமில்லை வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமாம். கூடுதலாக, ஒரு பணியாளர் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாமா அல்லது அலுவலகம் வந்து வேலை செய்யலாமா என்பதையும் அவரே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் போர்ச்சுகல் அரசு தெரிவித்துள்ளது. அப்படி வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்குத் தேவையான எலெக்ட்ரானிக் உபகரணங்களை நிர்வாகமே தர வேண்டுமாம். கூடுதலாக, பணியாளார்களுக்கு ஏற்படும் கூடுதல் மின்சார செலவு, இணைய செலவு என அனைத்தையுமே அந்தப் பணியாளரின் நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வழியில் வேலை பார்க்கும் பலரையும் ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பை போர்ச்சுகல் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை சட்டமாக இயற்றியது. தற்போது அமல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத்தால் இளைஞர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த இடத்தில் இருந்து வேலை செய்யவும் பயணங்கள் மேற்கொண்டபடியே வேலை செய்யவும் உதவும் என அந்நாட்டு அரசு நம்புவதாகத் தெரிவித்துள்ளது. கொரோனா காலங்களில் அனைத்து நாடுகளிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளுக்குப் பின்னர் அலுவலகங்களுக்கு வந்து மட்டுமே பணி செய்ய முடியும் என்ற சூழல் சர்வதேச அளவிலேயே மாறிவிட்டது.

JOBS, WORKFROMHOME, REMOTE JOBS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்