நெடுஞ்சாலை 'டிஜிட்டல்' போர்டில் ..'திடீரென' ஓடிய ஆபாச படம்..வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் யூனிவர்சிட்டி டிரைவ் என்ற நெடுஞ்சாலை உள்ளது.இந்த நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவிக்கவும், விளம்பரங்கள் செய்யவும் ஆங்காங்கே விளம்பர பலகைகள் உள்ளன.இதனை டிரிபிள் போர்டு என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் இந்த நிறுவனத்தின் வெப்சைட்டை ஹேக் செய்த ஹேக்கர்கள் அதில் சுமார் 20 நிமிடங்களுக்கு ஆபாச படங்களை ஓட விட்டுள்ளனர்.இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.இதனை நிறுத்த அந்த நிறுவனம் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியவில்லை.

கடைசியில் டிஜிட்டல் பலகையின் ஒட்டு மொத்த செயல்பாடு நிறுத்தப்பட்ட பின்புதான் அந்த வீடியோ நின்றது.இந்த சம்பவம் குறித்து அமெரிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி,டிஜிட்டல் போர்டுகளை ஹேக் செய்ததாக 2 பேரைக் கைது செய்தனர். அவர்களுக்குக் குறைந்தது 90 நாட்கள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படலாம் என தெரிகிறது.

 

POLICE, AMERICA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்