Russia – Ukraine Crisis: "ரஷ்யாவில் எங்களது ஓடிடி இயங்காது".. பிரபல நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா தனது வரலாற்றில் இதுவரையில் சந்தித்திராத எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. உலக நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேரடியாக குற்றம் சுமத்திவருகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக 140க்கும் மேற்பட்ட நாடுகள் வாக்கு அளித்துள்ளன.

Advertising
>
Advertising

புதின் தலைக்கு விலை.. ரஷ்ய தொழிலதிபர் செய்த காரியம்..என்ன நடக்கப்போகுதோ..?

இது ஒரு பக்கம் என்றால், ரஷ்யாவின் போர் குறித்த அறிவிப்பால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் அனைத்தும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. இதன் மூலம் தங்களது நாடுகளில் உள்ள ரஷ்ய வங்கிகளை முடக்கவும், ரஷ்ய பணக்காரர்களின் வளங்களை கைப்பற்றவும் உத்தரவிடப்பட்டன.

நெட்பிளிக்ஸ் அறிவிப்பு

இந்நிலையில், உலக திரை துறையே ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி இருக்கிறது. பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ரஷ்யாவோடு தற்காலிகமாக எதிர்காலம் சார்ந்த திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததின் விளைவாகவே நெட்பிளிக்ஸ் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ரஷ்ய மொழியை சேர்ந்த 4 சீரிஸ்கள், புரொடக்ஷன் மற்றும் போஸ்ட் புரடக்ஷன் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரபல துப்பறியும் கதையான "Zato"வும் அடக்கம்.

இந்த வார தொடக்கத்தில், Netflix வெளியிட்ட அறிக்கையில்," ரஷ்ய சேவையில் அரசு நடத்தும் சேனல்களை சேர்க்கும் திட்டம் இல்லை. இருப்பினும் அந்த சேனல்களை சேர்ப்பதானால்  அதற்கான ஒழுங்குமுறை திட்டம் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளது.

நோ சொன்ன கேன்ஸ்

"உக்ரைன் சூழ்நிலை சரியாகும் வரையில் 2022 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில்  ரஷ்ய பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ள கூடாது" என கேன்ஸ் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேபோல, அமெரிக்காவை சேர்ந்த வார்னர் மீடியா மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய பிரம்மாண்ட சினிமா தயாரிப்பு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களது படங்கள் ரிலீஸ் செய்வதை தற்காலிகமாக தடை செய்துள்ளன.

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மெண்ட், பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது படங்களை ரஷ்யாவில் வெளியிட தற்காலிக தடை விதித்துள்ளன. ஆக இந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளது நெட்பிளிக்ஸ்.

துறைமுகத்தில் நின்ற 4.5 ஆயிரம் கோடி சொகுசு கப்பல்.. ஜெர்மனி அதிபர் எடுத்த அதிரடி முடிவு.. ரஷ்யாவுக்கு விழுந்த அடுத்த அடி..!

OTT PLATFORM, OTT PLATFORM PAUSE ITS PRJECTS IN RUSSIA, RUSSIA UKRAINE CRISIS, ரஷ்யா, நெட்பிளிக்ஸ் அறிவிப்பு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்